Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எப்போது நிம்மதியாகவும், ஒற்றுமையாகவும், பொருளாதார மேம்பாட்டுடன் வாழ ஆரம்பிக்கின்றோமோ அன்றே பூரணமான சுதந்திர தினமாகும்; கிழக்கின் கேடயம் எஸ்.எம். சபீஸ்!

எப்போது நிம்மதியாகவும், ஒற்றுமையாகவும், பொருளாதார மேம்பாட்டுடன் வாழ ஆரம்பிக்கின்றோமோ அன்றே பூரணமான சுதந்திர தினமாகும்; கிழக்கின் கேடயம் எஸ்.எம். சபீஸ்!

3 years ago
in செய்திகள்

வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து சுதந்திரமாக பேச, எழுத, சுயமாக தொழில் செய்ய, அடிமையாக இல்லாமல் வாழ தேவையான சுதந்திரத்தை இந்த சுதந்திரம் நமக்கு பெற்றுத்தந்துள்ளது. இந்த சுதந்திரத்தை பெற நமது மூத்தோர்கள் கடுமையாக போராடியுள்ளார்கள். அந்த சுதந்திரத்தை வைத்து நாம் நிம்மதியாக வாழ்கின்றோமா என்றால் இல்லை. நிம்மதியும் சேர்ந்து வந்தால் தான் அது பூரண சுதந்திரம். எமக்கு தாய் எவ்வளவு முக்கியமோ அதை போன்றே தாய் நாடும் முக்கியம். எமது சந்ததிகளுக்கு எமது தாய்நாட்டின் மீதான பற்றை சிறுவயது முதலே நாம் ஊட்ட வேண்டும். தேச பக்தியும், தேச உணர்வும் அவர்களுக்கிடையே வருகின்ற போதுதான் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற உணர்வு வரும். நாட்டை முன்னேற்ற நினைக்கின்றவர்களினால் தான் தனது சமூகத்தையும், ஊரையும் முன்னேற்ற முடியும் என கிழக்கின் கேடயம் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல் சம்மேளன முன்னாள் தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

மாவடிப்பள்ளி பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில் நேற்று (04) நடைபெற்ற இலங்கையின் 76 வது சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தலைவர் அஸ்ரப் அவர்களின் அரசியல் உதயத்தின் பின்னரே முஸ்லிங்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். ஆனால் இப்போது அந்த நிலை மாறியுள்ளது. சமூகம் சரியான தலைவர்களின் பின்னால் செல்ல வேண்டும். அதற்காக கட்சி, பிரதேச வாதங்களை துறந்து எம்மை சிறப்பாக வழிநடத்தக்கூடிய சரியான தலைவர்களை தெரிவு செய்யுங்கள். பொருளாதாரமும், சுய கௌரவமும் ஒழுங்காக என்று கிடைக்கிறதோ அன்றே முழுமையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்.

இந்த காலத்திற்கு பொருத்தமான வகையில் நாட்டின் கல்விமுறையில் மாற்றம் தேவையென்று உரியவர்களை கிழக்கின் கேடயம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். குழந்தைகளை பாடமாக்கும் கல்வி முறையிலிருந்து மாற்றியமைத்து சவால்களை எதிர்கொள்ளும் திராணியுள்ள தலைவர்களாக உருவாக்க அவர்களின் மீது கவனம் செலுத்துங்கள் என்றார்.

மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலை சம்மேளன தலைவர் எம்.எச்.எம். அஸ்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலை சம்மேளன தவிசாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், கிழக்கின் கேடயம் பொதுச்செயலாளருமான ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார். மேலும் விசேட அதிதிகளாக மாவடிப்பள்ளி ஜும்மா பெரியபள்ளிவாசல் தலைவர், பிரதேச முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம நிலதாரிகள், மனித அபிவிருத்தி ஸ்தாபன இணைப்பாளர், பாலர் பாடசாலை நிர்வாகிகள், ஆசிரியைகள், ஊடகவியலாளர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

September 19, 2026
வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்
செய்திகள்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

September 19, 2026
2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!
செய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!

September 19, 2026
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!
உலக செய்திகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!

September 19, 2026
உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்
சிறப்பு கட்டுரைகள்

உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்

September 19, 2026
யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது
செய்திகள்

யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது

September 19, 2026
Next Post
ஹுலந்த ஓயா பாலம் இடிந்து வீழ்ந்து விபத்து!

ஹுலந்த ஓயா பாலம் இடிந்து வீழ்ந்து விபத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.