Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸ்மா அதிபர் குறித்து சாகர காரியவசத்தின் சர்ச்சையான கருத்து; அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு!

பொலிஸ்மா அதிபர் குறித்து சாகர காரியவசத்தின் சர்ச்சையான கருத்து; அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய சாகர காரியவசம், நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபர் அரசுக்கும் மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என்றும், பொதுமக்களிடம் தாக்குதலுக்கு உள்ளாகும் பொலிஸ்மா அதிபராக அவர் வரலாற்றில் இடம்பிடிப்பதை காண விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்து தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஆனந்த விஜேபால, இவ்வாறான பொறுப்பற்ற கருத்துகளை அரசு சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது என தெரிவித்தார்.

அரசியல் அதிகாரத்திற்காக கடந்த காலங்களில் மக்களை பலிகொடுத்த அரசியல் கலாசாரத்தின் வெளிப்பாடாகவே இந்தக் கருத்துகள் அமைந்துள்ளன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தற்போதைய பொலிஸ்மா அதிபர் தனது பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், ஊழல், இலஞ்சம் மற்றும் அரச சொத்துகள் துஷ்பிரயோகம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளால் அச்சமடைந்த தரப்பினரே இவ்வாறான கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எச்சரித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!
செய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

September 19, 2026
பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!
செய்திகள்

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!

September 19, 2026
மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

September 19, 2026
வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்
செய்திகள்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

September 19, 2026
2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!
செய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!

September 19, 2026
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!
உலக செய்திகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!

September 19, 2026
Next Post
அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு