மினுவாங்கொட, அம்பகஹவத்த பகுதியில் சுமார் 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 12 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மினுவாங்கொட பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, மினுவாங்கொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரை சோதனையிட்டபோது 6 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேலும் 6 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்டநடவடிக்கைகளுக்காக மினுவாங்கொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








