சிலியின் – வால்பரைசோ பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இதுவரையில் 99 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அந்த நாட்டின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக் குறித்த பகுதியில் அவசரகால நிலையை அறிவித்துள்ளார். இந்நிலையில் 1,400 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென அஞ்சப்படுவதாகவும் சிலியின் உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா குறிப்பிட்டுள்ளார்.