Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டிஜிட்டல் கட்டண முறை மூலம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு நன்மைகள்; மத்திய வங்கியின் பணிப்பாளர் வசந்த அல்விஸ் விளக்கம்!

டிஜிட்டல் கட்டண முறை மூலம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு நன்மைகள்; மத்திய வங்கியின் பணிப்பாளர் வசந்த அல்விஸ் விளக்கம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் QR குறியீடு மூலம் ஒருங்கிணைந்த கட்டண முறை அல்லது UPI அறிமுகப்படுத்திய பின்னர் அது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (12) ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்றது.

NPCI International Payments Limited மற்றும் இலங்கையின் LankaPay பிரைவேட் லிமிடெட் இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்தை விரைவாக விரிவுபடுத்தும் நோக்கத்துடன், 10,000 வர்த்தக நிலையங்களில் இந்த கட்டண முறை இதனுடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படுவதோடு இந்த வசதியை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம், 2024 மார்ச் மாத்திற்குள் , இந்த வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கை 65,000 ஆக உயர்த்தப்படும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

தமது வங்கிக் கணக்குள்ள நிதி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்வதன் மூலம் வர்த்தகம் தொடர்பான QR குறியீட்டை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் பணிப்பாளர் (பணம் செலுத்துதல் மற்றும் தீர்வுகள்) வசந்த அல்விஸ் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் இந்தக் குறியீட்டை வழங்கக் கடமைப்பட்டிருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

பெரும்பாலான இந்தியர்கள் QR குறியீடு ஊடாக கொடுப்பனவுகளை செலுத்துவதற்குப் பழக்கப்பட்டிருப்பதால், இந்திய சுற்றுலாப் பயணிகள், இலங்கை முழுவதும் உள்ள வர்த்தக சமூகத்திற்கு பணம் செலுத்துவதற்கு UPI- தொலைபேசி செயலிகளை தடையின்றி பயன்படுத்தலாம்.

ஏற்கனவே உள்ளுர் பரிவர்த்தனைகளுக்கு மிகவும் உகந்த முறைமையான , LankaQR ஊடாக QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் கொடுப்பனவுகளை செலுத்த முடியும்.

இதன் மூலம் செலுத்தப்படும் பணம் இலங்கை ரூபாவில் உரிய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உடனடியாக குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படும். இவ்வாறான வருமானத்தை அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு 06 மாதங்களில் குறுகிய காலத்தில் வங்கிக் கடன்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும்.

இரண்டாவது கட்டத்தில், இந்த கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்துவதுடன், இந்தியாவில் QR குறியீடு மூலம் பணம் செலுத்தும் வசதியை இலங்கையர்களுக்கு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

2.5 மில்லியன் டொலர் விவகாரம்; இன்று மீண்டும் கூடும் அரசாங்க நிதி குழு!
செய்திகள்

2.5 மில்லியன் டொலர் விவகாரம்; இன்று மீண்டும் கூடும் அரசாங்க நிதி குழு!

June 23, 2026
ஈரான் எண்ணெய் மீதான அமெரிக்க தடை நீக்கம்
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் மீதான அமெரிக்க தடை நீக்கம்

June 23, 2026
இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ பேருந்து சேவைக்கு தனியார் பேருந்து சங்கம் எதிர்ப்பு
செய்திகள்

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ பேருந்து சேவைக்கு தனியார் பேருந்து சங்கம் எதிர்ப்பு

June 23, 2026
கத்தார் எரிவாயு விநியோக தள வெடிவிபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

கத்தார் எரிவாயு விநியோக தள வெடிவிபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு

June 23, 2026
அநுர ஒவ்வொரு லீற்றர் டீசலிலும் 98 ரூபாய் திருடுகிறார்; சம்பிக்க ரணவக்க கூறுகிறார்
செய்திகள்

அநுர ஒவ்வொரு லீற்றர் டீசலிலும் 98 ரூபாய் திருடுகிறார்; சம்பிக்க ரணவக்க கூறுகிறார்

June 23, 2026
ரணிலின் லண்டன் பயண விவகாரத்தை விசாரிக்க பெருந்தொகை செலவு; ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு
செய்திகள்

ரணிலின் லண்டன் பயண விவகாரத்தை விசாரிக்க பெருந்தொகை செலவு; ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு

June 22, 2026
Next Post
சபரகமுவ பல்கலைக்கழக 7 மாணவர்கள் விளக்கமறியலில்!

சபரகமுவ பல்கலைக்கழக 7 மாணவர்கள் விளக்கமறியலில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு