Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடற்படை முகாமிற்கு முன்பாக கோரப்படுகொலை சம்பவம்; யாழில் பரபரப்பு!

கடற்படை முகாமிற்கு முன்பாக கோரப்படுகொலை சம்பவம்; யாழில் பரபரப்பு!

3 years ago
in முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இன்று ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த படுகொலை இடம்பெற்ற வீடு கடற்படை முகாம் முன்பாகவே அமைத்துள்ளதாகவும், கடற்படை முகாம் முன்பாகவே படுகொலை எனின் அம்முகாம் எதற்கு? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் இன்று நடைபெற்ற கோரப்படுகொலை தொடர்பில் நேர்மையான விசாரணை நடாத்தப்படவேண்டும். நெடுந்தீவு இறங்குதுறையினை அண்மித்தவாறு அமைந்துள்ள வீடொன்றில் இருந்து ஐவர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளனர்.இவர்கள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நெடுந்தீவு – இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இனந் தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இச்சம்பவம் இடம்பெற்ற போது வீட்டின் உரிமையாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறுபேர் தங்கியிருந்த சமயமே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.மேற்படி வீட்டின் உரிமையாளரான பெண்ணின் கணவர் 1985 ல் சிறீலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட குமுதினி படகு படுகொலையில் கொல்லப்பட்டவர் ஆவார்.

வருடாந்தம் நாங்கள் நெடுந்தீவு இறங்குதுறையில் முன்னெடுக்கின்ற குமுதினி படகு படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளில் குறித்த பெண்மணி தவறாது கலந்துகொள்வார்.நெடுந்தீவு தனிநாயகம் அடிகளாரின் ஞாபகார்த்த சிலையின் பின்புறமாகவும் நெடுந்தீவின் பிரதான கடற்படை முகாமாகிய வசப முகாமின் எதிர்ப்பக்கமாவும் இவ்வீடு அமைந்திருக்கின்றது.

கடற்படைமுகாமுக்கும் இவ்வீட்டிற்கும் சில மீற்றர் இடைவெளியே காணப்படுகின்றது . நூற்றுக்கணக்கான கடற்படையினர் காணப்படுகின்ற இம்முகாமின் முன்னாலுள்ள வீட்டின் மீது இவ்வாறான தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச்செல்வதென்பது எண்ணிப்பார்க்கமுடியாத சம்பவமே.

சாதாரணமாக நெடுந்தீவுக்குள் நுழையும்போதே ஆள் அடையாள அட்டை பதிவு செய்தல், குறுக்கு விசாரணைகள் போன்ற நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.இவ்வாறான நிலையில் இவ்வாறான கொடூர தாக்குதலை நடாத்திவிட்டு இலகுவாக தப்பிச்செல்லமுடியுமெனின் பாரியதொகையிலான மக்களின் வரிப்பணத்தில் அந்த முகாம் ஏன் அமைக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இவ்வாறான கொடூர தாக்குதலை நடாத்திவிட்டு இலகுவாக தப்பிச்செல்லமுடியுமெனின் பாரியதொகையிலான மக்களின் வரிப்பணத்தில் அந்த முகாம் ஏன் அமைக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
‘இவ்விடத்தில் சிறுநீர் கழிக்காதீர்கள்’ என கூறிய வர்த்தகர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!

'இவ்விடத்தில் சிறுநீர் கழிக்காதீர்கள்' என கூறிய வர்த்தகர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.