நாரம்மல் பகுதியில் பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த லாரி சாரதியின் மனைவி 20 கோடி நஷ்டஈடு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக மவ்ரட செய்தி வெளியிட்டுள்ளது .
சென்ற மாதம் தனது கணவன் லாரியில் சென்று கொண்டிருக்கும் பொழுது யுக்திய நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாக கூறப்படும் பொலிஸ் அதிகாரியின் மூலம் கவனயீனமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டு சம்பத்தினால் தனது கணவன் கொலை செய்யப்பட்டதாக அடிப்படை மனுவில் குறித்த பெண் தெரிவித்துள்ளார் .
3 குழந்தைகளின் தாயான அவருக்கு எவ்வித நியாயமான காரணமுமின்றி தனது கணவன் கொலைசெய்யப்பட்டதால் அவரது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதால் , தனக்கு 20 கோடி நஷ்டஈடு வழங்கும் படி குறித்த பெண் அடிப்படை மனுவை தாக்கல் செய்துள்ளார் .