Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீதியில் உலரவிடப்படும் நெல்லினால் புற்று நோய் ஏற்படும் அபாயம்; எச்சரிக்கை விடுத்துள்ள முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்!

வீதியில் உலரவிடப்படும் நெல்லினால் புற்று நோய் ஏற்படும் அபாயம்; எச்சரிக்கை விடுத்துள்ள முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வீதியில் உலரவிடப்படும் நெல்லுடன் ‘கற்மியம்’ எனும் மூலகம் ஒன்று கலப்பதாகவும், எனவே அந்த நெல் அரிசியை உணவாக உட்கொள்ளும்போது புற்று நோய் ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, பொதுமக்கள் வீதியில் நெல்லை உலரவிடுவதைத் தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற நிலையில் அக்கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போது பெரும்போக நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் விவசாயிகள் பிரதான வீதிகளை நெல் உலரவிடும் தளங்களாகப் பயன்படுத்துகின்றனர்.

இதனால் பாரிய அளவில் வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றன. பலர் வீதி விபத்துக்களில் சிக்கி பரிதாபமான முறையில் உயிரிழக்கின்றனர்.

இவ்வாறு வீதியில் நெல் உலரவிடுவதனால் வீதி விபத்தையும் தாண்டி பாரிய ஆபத்தொன்று காணப்படுகின்றது.

வாகன டயர்கள் வீதியில் உராய்வதனால் ‘கற்ட்மியம்’ எனும் மூலகம் வீதியில் படிந்துள்ளது. இந்நிலையில் இவ்வாறான வீதியிலேயே விவசாயிகள் நெல்லினை உலரவைக்கின்றனர்.

இவ்வாறு நெல்லினை உலரவிடும்போது குறித்த ‘கற்மியம்’ எனும் மூலகம் நெல்லோடு கலந்துவிடுகின்றது.

இவ்வாறு இந்த ‘கற்மியம்’ எனும் மூலகம் கலந்த நெல் அரிசியை தொடர்ந்து பத்துத் தொடக்கம் பதினைந்து வருடங்கள் உணவாக உட்கொள்ளும்போது புற்றுநோய் ஏற்பட வய்ப்பிருக்கின்றது.

எனவே, வீதியில் நெல் உலரவிடுவதை விவசாயிகள் தவிர்ப்பதே சிறந்தது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
மட்டக்களப்பு சுற்றுலாத்துறையை மேம்படுத்த விசேட கலந்துரையாடல்!

மட்டக்களப்பு சுற்றுலாத்துறையை மேம்படுத்த விசேட கலந்துரையாடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு