Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தலைமன்னாரில் 10 வயது சிறுமியின் படுகொலை விவகாரம்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தலைமன்னாரில் 10 வயது சிறுமியின் படுகொலை விவகாரம்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை எதிர்வரும் 48 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த மன்னார் நீதிமன்றம் இன்று (17) அனுமதி வழங்கியுள்ளது.

தலைமன்னார் – ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் நேற்றைய தினம் (16) சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதே கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் வேலை செய்யும் திருகோணமலை குச்சவெளி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் இன்றைய தினம் (17)​ மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர் .

இதன் போது மன்னார் மாவட்ட பதில் நீதவான் எஸ்.ஜெபநேசன் லோகு, பொலிஸாரின் விண்ணப்பத்திற்கு அமைய குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 48 மணித்தியாலம் பொலிஸ் தடுப்பில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார்.

இந்த நிலையில் குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் காவலில் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதேவேளை இன்றைய தினம் (17) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் சடலம் காலை 10.30 மணியளவில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பிரேத பரிசோதனை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி செல்லத்துரை பிரணவன், குறித்த சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் சிறுமி படுகொலை - நீதிமன்றின் உத்தரவு

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
நீதி கிடைக்காததால் தான் தெருவில் நிற்கின்றோம்; காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தலைவி கனகரஞ்சினி ஆதங்கம்!

நீதி கிடைக்காததால் தான் தெருவில் நிற்கின்றோம்; காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தலைவி கனகரஞ்சினி ஆதங்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு