தற்போது காணப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA 1978) இரத்துச் செய்யும் நோக்குடன் மார்ச் 2023 இல், இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்துகெதிரான சட்டமூலத்தை (சட்டமூல வரைபு) வர்த்தமானியில் வெளியிட்டது. இந்த 2018 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தை புதியதொரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற சட்டத்தால் பிரதியீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக பயங்கரவாதத்துக்கெதிரான சட்டமூல வரைபானது அமைகின்றது. இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒரு போதும் நிறைவேற்றப்படவில்லை. கொவிட்-19 தொற்று நோய் மற்றும் அண்மைய பொருளாதார அத்துடன் அரசியல் நெருக்கடி காரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தை சீர்திருத்துமாறு சர்வதேச செயற்பாட்டாளர்களிடம் இருந்து இலங்கை மேலதிக அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றது. பயங்கவாதத்தை முறியடித்தல் என்ற பெயரில் இலங்கையின் அதிகார தரப்புகள் வழமையாக உரிமைகளை துஷ்பிரயோகம் செய்வதை இலகுபடுத்தும் கொடுமையான துர் பிரபலம் மிக்க சட்டமொன்றாக பயங்கரவாத தடைச் சட்டம் அமைந்துள்ளது.
பொதுவாக நோக்கும் வேளை, புதிய சட்டமூலம் 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரச்சினைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபுக்கு மிகவும் ஒத்ததாகவே காணப்படுகின்றன.
மேலும், இச்சட்டமூலத்தின் பல ஏற்பாடுகள் 2018 ஆம் ஆண்டின் சட்டமூல வரைபை விட மிக மோசமானவையாகக் காணப்படுகின்றன, அதேவேளை, ஏனைய ஏற்பாடுகள் பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்ளவற்றை ஒத்தனவாக காணப்படுகின்றன. சட்டத்தின் தக்கவாறான நடைமுறை தொடர்பில் சில வழிமுறை முன்னேற்றங்கள் காணப்படுகின்ற போதும், இவை சட்டமூலத்தின் பிரச்சினைக்குரிய ஏற்பாடுகளை கருத்திற் கொள்ளும் வேளை அம்மேம்பாடுகள் மிகவும் சிறியனவாகவே அமைந்துள்ளன. இந்த பிரச்சினைக்குரிய ஏற்பாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்ச்சியாக இடம்பெற வழிவகுப்பனவாகவே உள்ளன.
மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமூலத்தின் வரைபு பொது மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் அதிக ஆலோசனைகள் எவையும் பெறப்படாமல் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகின்றது. பயங்கரவாதத்தை முறியடிக்கும் வேளை மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களை பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளரின் கருத்து பின்வருமாறு அமைகின்றது, “சிவில் சமூகத்தின் பங்கேற்பானது மிகவும் வினைத்திறன் மிக்க [பயங்கரவாத] முன் தடுப்பு மூலோபாயங்களுக்கு வழி வகுக்கின்றது. பயங்கரவாத செயற்பாடுகளுக்கான எதிர்ப்பு தீவிர அல்லது வன்முறைத் தீவிரமயமாதல் ஆகியவற்றின் மீதான ஈர்ப்பைக் குறைத்தல் ஆகிய இரண்டு வழிவகைகள் ஊடாக இம்மூலோபாயங்கள் எட்டப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) இது தொடர்பில் பின்வருமாறு மேலும் தெரிவிக்கின்றது: “அவர்களைப் பாதிக்கும் எந்தவொரு சட்டம், ஒழுங்கு விதி, கொள்கை, நிகழ்ச்சித்திட்டம் அல்லது மூலோபாயமொன்றின் வடிவமைப்பு, அமுல்படுத்தல் மற்றும் மீளாய்வு என்பவற்றில் தனி நபர்கள் மற்றும் குழுக்களின் சமமான பங்கேற்பை சட்டங்கள், கொள்கைகள் மற்றும் அமைப்பு ரீதியான ஏற்பாடுகள் உறுதி செய்ய வேண்டும். ” சட்டமூலத்தைச் சூழ உரையாடலகள் காணப்படாத நிலை அரசாங்கம் தனது பயங்கரவாத முறியடிப்பு சட்டத்தை சீர்திருத்துவதில் தீவிர அக்கறை கொண்டுள்ளது என்ற நம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்திருக்கவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தை படிப்படியாக சீர்திருத்துவோம் என அரசாங்கம் வழங்கியிருந்த உறுதி மொழியை பொய்யாக்குவதாக இது காணப்படுகின்றது.
கீழே விளக்கப்பட்டவாறு, சர்வதேச சட்டங்களின் கீழ் மனித உரிமைகள், குடியியல் சுதந்திரங்கள், அத்துடன் மிகவும் குறிப்பிட்ட வகையில் ஒன்று சேர ஒருங்கிணைய மற்றும் வெளிப்படுத்த கொண்டுள்ள சுதந்திரங்களை பாதுகாக்க இலங்கை கொண்டுள்ள கடப்பாடுகளுக்கு இணங்கியொழுக பயங்கரவாதத்துக்கெதிரான சட்டமூலம் தவறியுள்ளது. மாறாக, இவ்வாறான சட்டமூலம் ஒன்றை உருவாக்குவது பிற்போக்குத்தனமானதாகவும் அடிப்படைச் சுதந்திர மீறல்களை ஏற்படுத்துவதாகவும் அமையும். சமூகப் பிரிவினை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றை அதிகரிக்கும் இந்த முன்மொழியப்பட்டுள்ள சட்டவாக்கம் வினைத்திறன் மிக்க குறைப்பதாகவே அமையும். தேசிய பாதுகாப்பு கட்டமைப்பின் தரத்தைக் குறைப்பதாகவே அமையும்.
ஏனைய பிரச்சினைகளுக்கு மத்தியில், இலங்கையின் சமகால பயங்கரவாதத்துக்கெதிரான சட்டமூலம் கொண்டுள்ள பின்வரும் பிரச்சினைக்குரிய அம்சங்களை நாம் சுட்டிக்காட்டுகின்றோம்…..
- பயங்கரவாத குற்றங்கள் மற்றும் நோக்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தெளிவற்ற வரைவிலக்கணங்கள் வெளிப்படுத்தல் சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதுடன் எதேச்சையான அமுல்படுத்தலுக்கு வழிவகுக்கின்றன.
உறுப்புரை 3 இல் பயங்கரவாதத்துக்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணம் தேவைக்கு அதிகமாக பரந்ததாகக் காணப்படுவதுடன் அதில் சட்ட ரீதியான மற்றும் பயங்கரவாத தன்மையற்ற பல செயற்பாடுகள் இவ்விரைவிலக்கணத்துக்குள் உள்ளடங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சொத்துச் சேதம், களவு, அத்துடன் இணையத்தளங்களில் தலையீடுகளை மேற்கொள்ளல் போன்ற சிறு குற்றங்களும் இதன் பரப்பு எல்லைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் “ஒரு சட்டமுறையற்ற கூட்டத்தின் உறுப்பினர் ஒருவராக இருத்தல், பொதுமக்களின் ஒரு பிரிவினரை அச்சுறுத்தும் நோக்கத்துடன் அல்லது ஏதேனும் செயலை செய்வதற்கு அல்லது செய்யாதிருப்பதற்கு இலங்கை அரசாங்கத்தை அல்லது வேறேதேனும் அரசாங்கத்தை அல்லது ஒரு சர்வதேச ஒழுங்கமைப்பைப் பிழையான முறையில் அல்லது சட்டமுறையற்ற வகையில் வலுக்கட்டாயப்படுத்துதல் என்பன போன்ற தெளிவற்ற மொழிநடையும் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. “ஓரங்காட்டுகையை, பகைமையை அல்லது வன்செயலைக் கிளறி விடுவதாக அமைகின்ற தேசிய, இன ரீதியிலான அல்லது மத ரீதியிலான வெறுப்பை” எடுத்துரைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பல பரந்த செயற்பாடுகளையும் இந்த சட்டமூலம் குற்றமாக்கியுள்ளது. இது இலங்கையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயச் (ICCPR) சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடு ஒன்றின் அதே மொழிநடையில் வழங்கப்பட்டுள்ளது குறித்த சட்டம் சிறுபான்மை குழுக்களின் உறுப்பினர்களின் சுதந்திரமான வெளிப்படுத்தலுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்பட்ட சட்டமாக இச்சட்டம் காணப்படுகின்றது.
சட்டமூலத்தின் உறுப்புரை 10 ”பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை” குற்றமாக ஆக்கியுள்ளது. இது மேற்குறிப்பிடப்பட்ட செயல்களில் ஒன்றை செய்வதற்கு தயாராகுவதற்கு மக்களை மறைமுகமாக துண்டும் செயற்பாடுகளுக்கும் இக்குற்றம் நீடிக்கப்பட முடியும், அல்லது மக்களால் மறைமுகமான ஊக்குவிப்பு என புரிந்து கொள்ளப்படும் ஏதாவது குறியீடுகளை வெளியிடுவதை குற்றமாக்கலாம். அல்லது வெறுமனே அஜாக்கிரதையாக வெளியிடப்படும் கருத்து ஒன்றை அவ்வாறே மக்கள் எடுத்துக் கொள்வர் என கருதப்பட்டு அதுவும் குற்றமாக்கப்படலாம்.
இறுதியாக சட்டமூலத்தின் 11 ஆம் உறுப்புரை பயங்கரவாத வெளியீடுகளை பரப்புவதை குற்றமாக்குகின்றது இதில் வெளியீடுகளை விநியோகித்தல் சுற்றிவரச் செய்தல், கொடுத்தல், விற்றல், இரவலாக வழங்குதல் விற்பனைக்காக வழங்குதல் அவ்வாறான வெளியீடுகளை ஏனையோர் வாசிப்பதை செவிமடுப்பதை அல்லது பார்ப்பதை இயலுமாக்கும் சேவைகளை வழங்குதல், அந்த உள்ளடக்கங்களை இலத்திரனியல் முறையில் அனுப்புதல் அல்லது பொதுமக்களை பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் வெளியீடு ஒன்றை வைத்திருத்தல் என்பனவும் உள்ளடங்குகின்றன.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சாசனத்தின் (ICCPR)’ உறுப்புரை 15 இல் பொதிந்துள்ள சட்டரீதியான தன்மை என்ற கொள்கையின் கீழ் “குற்றவியல் பொறுப்பாக்கல் தெளிவான மற்றும் துல்லியமான ஏற்பாடுகளின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட விடயமாக அமைகின்றது, அத்துடன் அது சட்டத்தின் நிச்சயமான நிலைக் கொள்கையை மதிப்பதாகவும் தடை செய்யப்பட்ட நடத்தையின் பரப்பு எல்லையை தேவையற்ற விதத்தில் விரிவுபடுத்தும் பொருள் கோடலுக்கு உட்படுத்தப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதாக அமைய வேண்டும்” என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் கருத்தின் பிரகாரம், பயங்கரவாதக் குற்றங்களுக்கு மிகவும் தெளிவற்ற வரைவிலக்கணங்களை வழங்குவது சட்டரீதியான நிலை என்ற கொள்கையை அடைந்துகொள்வதைத் தடுக்கின்றது. அத்துடன் அது அரசாங்கங்களால் அரசியல் எதிர்ப்பை அல்லது தொழிற்சங்க சிறுபான்மை அல்லது மனித உரிமைக் குழுக்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தப்படலாம் பயங்கரவாதத்தை முறியடிக்கும் வேளை மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் இது பற்றி மேலும் குறிப்பிடுகையில் ‘வரைவிலக்கணங்கள் (பயங்கரவாதத்தின்/ தெளிவற்றதாக துல்லியமற்றதாக அல்லது தேவைக்கதிகமாக பரந்தனவாகக் காணப்படும் வேளை அவை சிவில் சமூகத்தை இலக்கு வைக்க மனித உரிமைப் பாதுகாவலர்களை வலைப்பதிவாளர்களை மற்றும் ஊடகவியலாளர்களை மௌனமாக்க பயன்படுத்தப்படலாம் மேலும் சிறுபான்மை, மத, தொழிலாளர் மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் அமைதியான நடவடிக்கைகளைக் குற்றமாக்கவும் பயன்படுத்தப்படலாம் என்று கூறுகின்றார். சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பயங்கரவாதத்தின் வரைவிலக்கணங்களில் சாத்தியமான குற்றங்கள் மரணத்தை அல்லது தீவிர உடற்காயத்தை ஏற்படுத்தும் மேலதிக நோக்கத்துடன் இணைக்கப்பட்டனவாகக் காணப்படுகின்றன’
இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில செயல்கள் மற்றும் வரைவிலக்கணங்கள் என்பன சட்டரீதியான பயங்கரவாதக் குற்றைங்களாக இருந்த போதும் சிறியன தொடக்கம் தீவிரமான குற்றங்களை ஒரே வாக்கியத்தில் உள்ளடக்கி குற்றங்களின் குழுவாக ஒன்றிணைத்திருப்பது சட்டத்தினை எதேச்சையாக பயன்படுத்தும் நிலையை உருவாக்கி இருப்பதுடன் அது துஷ்பிரயோகத்துக்கு வழி வகுக்கும் உதாரணமாக “ஓரங்காட்டப்படலைத் தூண்டுதல்” என்பது வன்முறையைத் தூண்டுதல்” என்பதை விட மிகவும் வித்தியாசமானது. .அதே போன்று இணையத்தளம் ஒன்றில் தலையீடுகளை மேற்கொள்வது என்பது படுகொலை” அல்லது பணயக் கைதிகளை பிடித்தல் என்பதன் தீவிரத்தன்மையின் அளவுடன் ஒருதிசையாகதாகும் அதே போன்று. உறுப்புரை 10 இல் பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் என்பதன் மொழிநடை மிகவும் தெளிவற்றதாகக் காணப்படுகின்றது. அத்துடன் இது சட்டரீதியாக உள்ள சுதந்திர வெளிப்படுத்தலில் தீவிரமான மட்டுப்பாடுகளை ஏற்படுத்த வழிவருக்கும் குறிப்பாக ஊடகவியலாளர்கள். ஊடகம் மற்றும் ஏனைய கருந்து தெரிவிப்போரின் சுதந்திரமான வெளிப்படுத்தலை பாதிக்கும்.
குறிப்பிட்ட இனக் குழு ஒன்று தொடர்பில் உருவாக்கப்பட்ட சட்டவாக்கம் ஒன்றுக்கு எதிராக ஆதரித்து வாதிடும் குழு ஒன்று பிரச்சாரம் ஒன்றை முன்னெடுக்கலாம். இப்பிரச்சாரத்தில் இந்த குழு அவ்வின மக்களை முடிந்தளவு அதிகமாக இணையக் கருத்தூட்டங்களை வழங்குமாறு ஊக்குவிக்கலாம். இது அரச இணையத் தளத்தை செயலிழக்க வைக்கின்றது எனக் கருதுவோம். இது அரசாங்கத்தின் செயற்பாட்டை சட்டமுறையற்ற விதத்தில் தடுக்கும் வகையில் அமைந்த இணையத்தளத்தின் மீதான
தலையீடு எனக் கருதப்படுமாஅல்லது ஓரங்கட்டப்படுவதை தூண்டுவதாக அமையுமா?
இதே போன்று, சுவரோவிய கலைஞர் ஒருவர் பிரச்சார வாசகம் ஒன்றை அல்லது தாக்குதல் மிக்க காயப்படுத்தும் விடயத்தை ஒரு சனத்தொகையினை மிரட்டும் அல்லது அரசாங்கத்தை ஏதாவது செய்ய வைக்கும் நோக்கில் விசிறியடிக்கும் மை மூலம் சுவரில் வரையும் வேளை அது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் செயற்பாடாகவும் பார்க்கப்படலாம். ஆர்ப்பாட்டம் அல்லது ஒன்றுகூடல் ஒன்றின் போது கட்டடம் ஒன்றுக்கு சேதம் ஏற்படுத்தப்படும் வேளை அத்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டோர் மற்றும் அதனை ஒழுங்கு செய்தோர் மீது பயங்கரவாத குற்றம் சுமத்தப்படலாம். அதே போன்று, இந்த ஆர்ப்பாட்டம் பற்றி முகநூலில் அல்லது செய்தி நிறுவனம் ஊடாக தகவல்களை பிரசுரம் செய்வது “பயங்கரவாத செயலை” ஊக்குவிக்கும் செயலாக நோக்கப்படக் கூடும். பிரசுரம் ஒன்றைப் பகிர்வது தொடர்பான பிரிவு 11 இன் கீழ் அவ்வாறான முகநூல் பதிவினை வெறுமனே பகிர்வது கூட ஒரு குற்றமாகக் கருதப்படலாம்.
இந்த வரைவிலக்கணங்கள் அவற்றின் தற்போதைய வடிவங்களில் பயன்படுத்தப்படும் வேளை அவை வெளிப்படுத்தல் சுதந்திரம் மீதான மீறல்களுக்கு வழி வகுப்பதோடு சிவில் செயற்பாட்டின் பேச்சு பொதுப் பங்கேற்பு ஆர்ப்பாட்ட செயற்பாடுகள் மற்றும் ஏனைய சட்ட ரீதியான அம்சங்களில் தீய விளைவுகளை ஏற்படுத்தும்.
- இடங்கள், வீதிகளை மூடவும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அத்துடன் ஒன்று கூடல்கள், பேரணிகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளைத் தடை செய்ய பொலிஸ் அல்லது/ அத்துடன் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள தேவைக்கதிகமான பரந்த அதிகாரங்கள் ஒன்று கூடும் சுதந்திரத்தை மீறும் விதத்தில் உள்ளன.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நீதவானின் அனுமதியுடன் வீதிகளை மூடுதல், பொதுப் போக்குவரத்து முறைமையை இடை நிறுத்துதல், மக்கள் ஒன்று திரளல், ஒன்றுகூடல்கள், பேரணிகள் மற்றும் நடைபவனிகளை முன் தடுத்தல் அத்துடன் பயங்கரவாத அச்சுறுத்தல் ஒன்று காணப்படின் மக்களை “எந்தவொரு குறிப்பிட்ட செயற்பாட்டிலும்” ஈடுபடுவதில் இருந்து முன் தடுத்தல் ஆகிய விடயங்களை மேற்கொள்வதை பயங்கரவாதத்துக்கெதிரான சட்டமூலத்தின் உறுப்புரை 61 அனுமதிக்கின்றது.
இவ்வாறான மட்டுப்பாடுகள், அவற்றின் பிரயோகத்தின் மீது சில தடைகள் காணப்பட்ட போதும், இராணுவச் சட்ட அமுலாக்கம் அல்லது அவசரகால நிலைக்கு அதிகம் ஒத்தவையாகக் காணப்படுகின்றன. இதன் போது, உரிமைகள் அடிக்கடி மீறப்படுகின்றன இந்நடவடிக்கை பயங்கரவாத செயற்பாட்டை முன் தடுக்கும் நியாயமான நடவடிக்கைகள் என்பதை விட மேற்குறிப்பிட்ட நிலையினையே ஏற்படுத்துகின்றன. இவை மிகவும் பரந்தனவாகக் காணப்படுவதுடன் சாத்தியமான தீங்கை எது உருவாக்குகின்றது என்பதை தீர்மானிப்பதற்கு உள்ளூர் சட்ட அமுலாக்கத்துக்கு மிகவும் அதிகமான அதிகாரத்தை பகிர்கின்றன. இவ்வாறான விகிதசமமற்ற கட்டுப்பாடுகள் சமாதானத்தை ஊக்குவிப்பதில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
உதாரணமாக, ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நன்கு அறியப்பட்ட பிரச்சாரக் குழு ஒன்று மக்கள் ஒன்று கூடும் இடமொன்றில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தயார் நிலையில் உள்ளது என்ற தகவலை ஒரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிலவேளை பெற்றிருக்கலாம். இதே குழு முன்னர் நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றில் சில சொத்துச் சேதங்கள் ஏற்பட்டது (இதற்கு பொறுப்பு யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை) எனவே, சொத்துச்சேதம் அல்லது இந்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்ட ஏளைய செயல்களில் ஏதாவது இடம்பெறும் சாத்தியத்தைக் கருத்திற் கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள அனுமதிப்பதில்லை என அத்தியட்சகர் நீர்மானிக்கின்றார் தனிநபர்களின் குடியியல் சுதந்திரங்களை மீறும் இவ்வாறான செயற்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தி முரண்பாடு மற்றும் சமூகப் பதட்டம் என்பவற்றுக்கு வழிவகுக்கின்றன.
மேலும் அமைதியாக ஒன்று கூடும் சுதந்திரம் இலங்கை ஏற்றுமதி செய்துள்ள சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயத்தினால் பாதுகாக்கப்பட்ட அடிப்படை உரிமையாகவுள்ளது. அமைதியான கூடல் குடியியல் விவகாரங்களில் பொது மக்கள் பங்கேற்பை ஏற்படுத்துவதுடன் உரையாடல்கள் உருவாக வழிவகுக்கின்றது. இவ்விடயங்கள் ஊடாக வன்முறை தீவிரமயமாதலை முறியடிப்பதில் அமைதியான ஒன்று கூடல் முக்கிய வகிபாகம் ஒன்றைக் கொண்டுள்ளது. இவ்வகிபாகம் சர்வதேச அமைப்புகளின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது சர்வதேச நியமங்கள் ஒன்று கூடல்களை நடத்துவதற்கு ஆதரவான சட்டத் துணிவை” வளியுறுத்துகின்றன. அவை முடியுமான அளவு ஒழுங்குவிதிகள் இல்லாமல் அனுபவிக்கக் கூடிய வகையில் அமைந்திருக்க வேண்டும் அமைதியான ஒன்றுகூடல்களை பாதுகாக்கும் கடமையை அரசாங்கம் நிச்சயமாகக் கொண்டுள்ளது “
சட்டமூலத்தின் ஏனைய இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊரடங்கு சட்டங்கள் தடை செய்யப்பட்ட இடங்களின் பிரகடணம் பொலிசாரினால் சொத்துக்கள் கைப்பற்றப்படல் மற்றும் நடமாடல் கட்டுப்பாட்டு ஆணைகள் என்பனவும் இதே போன்றே மட்டுப்பாடு மிக்கனவாகவும் கரிசனைக்குரியனவாகவும் காணப்படுகின்றன. அத்துடன், அவை சர்வதேச சட்டங்களின் கீழ் விகிதசமமற்றனவாக காணப்படும் சாத்தியம் மிக்கனவாக உள்ளன.
- பாரிய அளவில் தகவல் சேகரிப்பது அந்தரங்கம் மற்றும் வெளிப்படுத்தல் சுதந்திரம் போன்ற உரிமைகள் மீறப்பட வழிவகுக்கலாம்.
சட்ட அமுலாக்கத்துறை மின்னஞ்சல் மற்றும் ஏனைய தொடர்பாடல்களை உளவு பார்க்க, தேட மற்றும் கைப்பற்ற பரந்த அதிகாரங்களை அத்துறைக்கு உறுப்புரை 66 வழங்குகின்றது. தரவுகள் ஒட்டுமொத்தமாக உளவு பார்க்கப்படும் நிலைக்கு வழிவகுப்பதோடு சுதந்திர வெளிப்படுத்தல் மற்றும் அந்தரங்கத்துக்கான உரிமை என்பவற்றை மீறுவதாக அமைகின்றது. இவ்வாறான பரந்த தகவல் சேகரிப்பு அதிகாரங்கள், நீதவான் ஒருவரின் அனுமதி தேவைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும்,
வெளிப்படுத்தல் சுதந்திரம் மதும் அந்தரங்கத்துக்கான உரிமை என்பவற்றில் அனுமதிக்க முடியாத மட்டுப்பாடுகளுக்கு வழிவகுக்கின்றது.
குறிப்பிட்ட தனிநபர்களை அல்லது சமூகங்களை இலக்கு வைத்து தரவுகளைச் சேகரித்தல் உள்ளடங்கலாக உளவு பார்க்கும் செயற்பாடு கருத்து மற்றும் வெளிப்படுத்தல் சுதந்திரத்துக்கு அவசியமான பாதுகாப்பு மற்றும் அந்தரங்கம் என்பவற்றில் நேரடியான தலையீடுகளை மேற்கொள்கின்றது.” அந்தரங்கத்துக்கான உரிமை ICCPR இன் உறுப்புரை 17இல் பொதிந்துள்ளது. அத்துடன் தனிநபர்கள் அரசின் தலையீடுகள் இன்றி இடையீடுகளை மேற்கொள்ள முடியுமான ஒரு “அந்தரங்க வட்டத்தை” கொண்டுள்ளனர் என்ற அடிப்படையில் இவ்விடயம் கட்டியெழுப்பப் பட்டுள்ளது.'” பயங்கரவாதத்துக்கு எதிராக ‘போரிடுவதற்காக காணப்படும் உளவு அமைப்புங்கள் வெளிப்படுத்தல் சுதந்திரத்தின் மீது ஆழமான தாக்கத்தைக் ஆழமான தாக்கத்தைக் கொண்டுள்ளன. இந்த வரைபு உருவாக்கப்பட்டவாறு. சட்டமூலம் பயங்கரவாதக் குற்றங்களுக்கு வழங்கியுள்ள தேவைக்கு அதிகமாக பரந்த வரைவிலக்கணங்கள் காரணமாகவும் சந்நேகத்தின் அடிப்படையில் தரவு மற்றும் தொடர்பாடல்கள் பாரிய அளவுகளில் தேடப்பட ஒட்டுக்கேட்கப்பட்ட மற்றும் சோதனை செய்யப்பட ஏற்பாடுகள் உள்ளதாலும் உறுப்புரை 66 சர்வதேச சட்டங்களின் கீழ்க் காணப்படும் விகிதாசாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் சாத்தியம் அற்றதாகவுள்ளது
பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட அல்லது பொதுமக்கள் ஒழுங்கைப் பேண இவ்வகையான தலையீடுகள் அவசியமானவை என அரசாங்கங்கள் வாதிடலாம் என்ற போதும் அந்தரங்கம் மற்றும் வெளிப்படுத்தல் சுதந்திரம் என்பவற்றுக்கு ஏற்படுத்தப்படும் தனித்துவம் மிக்க அச்சுறுத்தலைக் கருதும் வேளை இவ்வாறான தலையீடுகள் தேவையற்றனவாகவும் விகிதசமமற்றனவாகவும் காணப்படுகின்றன.
மாறாக சர்வதேச சட்டத்தின் கீழ் இவ்வகையான உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இயலுமை மற்றும் உளவின் மூலம் கிடைக்கும் விடயங்களுக்காள அணுகல் என்பன தனித்துவம் மிக்க அதிகாரத் தரப்புக்கு ஒதுக்கப்பட வேண்டும். அத்துடன் பெறப்பட்ட தாவுகளை சேமிக்க மற்றும் பயன்படுத்த கடுமையான விதிகள் மற்றும் எல்லைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் சேகரித்தல் மற்றும் சேமித்தல் தேவைப்பாடுகளுடல் இவ்விடயம் கண்டிப்பான அவசியம் அத்துடன் விகிதசம அளவு. என்பவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- நிறுவனங்களை தடை செய்தல், தனி நபர்களுக்கு கட்டுப்பாட்டு ஆணைகள் பிறப்பிக்கப்படல், சொத்துக்களை பறிமுதல் செய்தல் மற்றும் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தல் என்பனவற்றுக்கான இயலுமை ஒருங்கிணைவதற்கான சுதந்திரம் மற்றும் ஏனைய உரிமைகளை தடுப்பனவாக உள்ளது.
வெறுமனே நியாயமான சந்தேகம் மற்றும் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தேவைக்கு அதிகமாக பரந்த பயங்கரவாத குற்றங்கள் என்பவற்றின் அடிப்படையில், நிறுவனங்களை காலவரையறையற்ற வகையில் ஜனாதிபதி தடை செய்வதை பயங்கரவாதத்துக்கெதிரான சட்டமூல வரைப்பின் 82 ஆவது உறுப்புரை அனுமதிக்கின்றது. நிறுவனமொன்று “இலங்கையின் அல்லது வேறேதேனும் தேசிய பந்தோபஸ்த்துக்கு பங்கம் ஏற்படுத்துகின்ற சட்ட முரணான வழிமுறையொன்றில் செயற்பட்டுக்கொண்டிருப்பதாக” என ஜனாதிபதியின் சந்தேகத்தின் பால் இது மேற்கொள்ளப்படுகின்றது. அதே போன்று, தனி நபர் ஒருவர் ஏனையோருடன் தொடர்பாட அல்லது இணைந்து கொள்ள கொண்டுள்ள உரிமையை ஜனாதிபதி தடுப்பதை அனுமதிக்கின்றது மேலும் தனி நபர் ஒருவர் தனது வதிவிடத்துக்கு வெளியே, வெளிநாடுகளுக்கு இலங்கைக்குள் அந்துடன் அவரின் பணித்தலத்துக்கு பயணம் செய்யும் உரிமையை இது மேலும் குறிப்பிடத்தக்க வகையில் மட்டுப்படுத்துகின்றது, அத்துடன் மேலும் இது அத்தனி நபர் ஏனையோருடன் ஒருங்கிணைவதை மற்றும் தொடர்பாடுவதையும் மட்டுப்படுத்துகின்றது. இவை அனைத்தும் பொலிஸ்மா அதிபர் வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கொள்ள முடியும் இவ்வுறுப்புரைகளில் காணப்படும் ஏற்பாடுகள் தெளிவற்றனவாக உள்ளன. இது அரசியல் மயப்படுத்தப்பட்ட தீர்மானம் மேற்கொள்ளலுக்கு வழி கோலுவதுடன் ஏனைய உரிமைகளுக்கு மத்தியில் ஒருங்கிணையும் சுதந்திரத்தையும் மீறும் தன்மை கொண்டனவாகக் காணப்படுகின்றன.
இந்த ஏற்பாடுகளின் கீழ் இலங்கை அரசாங்கத்தை விமர்சிக்கும் நிறுவனம் ஒன்று அல்லது அதன் நேசத் நரப்புகள் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்துகின்றன எனச் சித்தரிக்கப்பட்டு இந்த சட்டமூலத்தின் நிபந்தனைகளை மீறுகின்றன. தண்டிக்கப்படலாம். சட்டமுறையான சிவில் எனத சமுக நிறுவனங்கள். அரசியல் எதிர்க்கட்சிகள் தொழிலாளர் தரப்புகள், மனித ரிமைகள் அல்லது சிறுபான்மைக் குழுக்கள். ஊடகம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் ஏனைய குழுக்கள் இந்தப் பரந்த மொழிநடையின் கீழ் தடை செய்யப்படும் அபாயத்தில் உள்ளன.
மேலதிகமாக, சட்டமூலத்தின் உறுப்புரை 86 “எவரேனும் பொலிஸ் அலுவலர்” இச்சட்டத்தின் கீழ் தவறொன்றைப் புரிவதற்காக பயன்படுத்தப்பட்ட அல்லது அதனைப் புரிவதில் சம்பந்தப்பட்ட, அல்லது அதனைப் புரிவதில் பெறப்பட்ட ஏதேனும் அசையும் ஆதனத்தைக் கைப்பற்ற” அனுமதிக்கின்றது. பயங்கரவாத சந்தேக நபராக கருதப்படும் எந்த ஒரு நபரிடமும் இருந்தும் சொத்துக்களை கைப்பற்றும் வல்லமையை ஒட்டு மொத்த பொலிஸ் படைக்கும் இந்த தெளிவற்ற மொழிநடை வழங்குகின்றது, இது, சட்டமூலத்தில் காணப்படும் தேவைக்கு அதிகமாக பரந்தனவாகக் காணப்படும் வரைவிலக்கணங்களின் அடிப்படையில், பல அப்பாவி சிவிலியன்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் மீது பிரயோகிக்கப்படலாம். அத்தகைய சொத்துப் பறிமுதல் அதிகாரங்கள் அரசியல்மடுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஊக்குவிக்கும், அல்லது பொலிசார் தனிநபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதை அனுமதிக்கும், இலாப நோக்கற்ற ஒன்றியங்களின் கோப்புகள் சட்டத்தில் நியதிகளின் கீழ் போதிய நியாயப்படுத்தல் இன்றி பறிமுதல் செய்யப்படுவதை அனுமதிக்கும். இவ்விடயங்கள் சொத்து, அந்தரங்கம் மற்றும் ஒருங்கிணைதல் உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளன.
இந்த உறுப்புரைகள் போதிய அளவில் குறுகலானவையாகவோ அல்லது சரவதேச சட்டத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு விகிதசமமானவையாகவோ காணப்படவில்லை. ஆரம்பத்தில் ஒரு வருடத்துக்கும் அதன் பின்னர் வரையறையற்ற காலப்பகுதிக்கு நீட்டப்பட முடியுமானவையுமாகக் காணப்படும் இந்த தடை செய்யும் உத்தரவுகள் நிறுவனம் ஒன்றின் “ஆயுட் காலம்” அல்லது நிறுவன ரீதியான இருப்பு என்பவற்றுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன தடையுத்தரவுகள் தனி நபர் ஒருவர இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் நடமாடுவதை. தொடர்பாடுவதை மற்றும் ஒருங்கிணைவதை மட்டுப்படுத்துகின்றன. இதன் மூலமாக பல தரப்பட்ட உரிமைகள் மீறப்படுகின்றன. ஒருங்கிணைதல், ஒன்று கூடுதல் வெளிப்படுத்தல் மற்றும் நடமாட்டம் என்பவற்றுக்கான சுதந்திரங்கள் அத்துடன் அந்தரங்கத்துக்கான உரிமை இவ்வாறு மீறப்படும் உரிமைகளுள் உள்ளடங்குகின்றன.
இவ்வாறான சூழ்நிலைகளில், இவ்வகையான அதிகாரங்கள் சர்வதேச சட்டத்தில் தேவைப்படுத்தப்பட்டுள்ள நடைமுறைப் பாதுகாப்புகளுக்கு ஏற்புடையதாக அமையவில்லை. அரசாங்கம் அத்தகைய தடை அல்லது கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும் முன்னர் யதார்த்தங்களின் அடிப்படையில் சுயாதீனமான நீதி அமைப்பினால் மேற்கொள்ளப்படும் மதிப்பீடு மேற்குறிப்பிடப்பட்ட நடைமுறைப் பாதுகாப்புக்கு உதாரணமாக அமைகின்றது.
5. மரண தண்டனை. 20 வருட சிறைத் தண்டனைகள மற்றும் பாரிய தண்டபணங்கள் உள்ளடங்கலாக தீவிரமான தண்டனைகளை இந்த சட்டமூலம் உள்ளடக்கியுள்ளது.
சர்வதேசச் சட்டங்களுக்கு ஏற்புடையதாக பயங்கரவாத தடைச் சட்டத்தை சீர்திருத்துவதில் இருந்து நீண்ட தூரம் விலகிச் சென்று, பயங்கரவாதத்துக்கெதிரான புதிய சட்ட மூல வரைபில் இலங்கை மரண தண்டனையை அறிமுகப்படுத்தியுள்ளது. மரண தண்டனை வாழும் உரிமையை மீறுவதாக அமைகின்றது பல நாடுகள் கருதுவதற்கு என ஏற்புடையாதாக இம்மரண தண்டனை அமுலாக்கம் இலங்கையில் பல ஆண்டுகளாக பிற்போடப்பட்டு வரும் நிலையில் புதிய சட்டமூலம் மரண தண்டனையை அறிமுகப்படுத்தியுள்ளது சிறைத்தண்டனை காலப்பகுதி மற்றும் தண்டப்பனம் என்பன தொடர்பில் காணப்படும் பாரிய தண்டனைகளுக்கு மேலதிகமாக், இச்சட்டமூலத்தின் தேவைக்கதிகமான பரந்த தன்மை மற்றும் தெளிவற்ற சட்ட ஏற்பாடுகளைக் கருத்திற்கொள்ளும் வேளை இந்த தண்டனைகள் உரிய அளவற்றனவாகவும் தீவிரமானதாகவும் காணப்படுகின்றன.
எதிர்கால பயங்கரவாத செயற்பாடுகளை வினைத்திறனுடன் தடுப்பதற்கு பதிலாக, பல மிகையான ஏற்பாடுகளைக் கொண்ட இந்த சட்டமூலத்தில் கடுமையான தண்டனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தண்டனைகள் வெளிப்படுத்தல், ஒன்று கூடுதல் மற்றும் ஒருங்கிணைதல் சுதத்திரங்களின் பிரயோகத்தின் மீதான தாக்கம் உள்ளடங்கலாக சட்டரீதியான மற்றும் அமைதியான சிவில் சமூக செயற்பாட்டில் தீங்கான தாக்கங்களை ஏற்படுத்தும் சாத்தியத்தைக் கொண்டுள்ளன. மேலும், இது சமூக முரண்பாடுகளை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் சாத்தியத்தையும் ஏற்படுத்துகின்றது.
முடிவுரை
ஒருங்கிணைதல், ஒன்று கூடல் மற்றும் வெளிப்படுத்தல் சுதந்திரங்களில் மீறல்களை ஏற்படுத்தும் சாத்தியத்தை உருவாக்கும் இந்த சட்டமூலத்தின் ஏற்பாடுகளிலேயே இந்த சுருக்கம் கவனம் செலுத்துகின்றது இச்சட்டமூலத்தின் நாட்டுக்கு வெளியே உள்ள இடங்கள் பற்றிய ஏற்பாடுகள் தேவைக்கு அதிகமான பரந்த பொலிஸ் அதிகாரங்கள், மற்றும் ஏனைய அந்தரங்க மீறல்கள்(நிதியியல் நிறுவனங்களிடம் இருந்து நபர்கள் மற்றும் அவர்களின் கொடுக்கல் வாங்கல் தரவுகளைக் கோருதல் உள்ளடங்கலாக) அத்துடன் தக்கவாறான சட்ட நடைமுறை தொடர்பான மீறல்கள் உள்ளடங்கலாக கரிசனைக்குரிய பல பகுநிகள் இந்த சட்டமூல வரைபில் காணப்படுகின்றன.
பயங்கரவாதத்துக்கெதிரான இந்த சட்டமூல வரைபு சர்வதேசச் சட்டங்களின் கீழ் இலங்கை கொண்டுள்ள கடப்பாடுகளை மீறும் தன்மை மிக்கதாகக் காணப்படுகின்றது. அத்துடன், இதற்கு முன்னர் வரையப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் இருந்து மேம்பாடுகள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை. இலங்கையின் தேசிய பாதுகாப்பு சட்டங்களை சீர்திருத்தும் நோக்கில் தன்னம்பிக்கையுடன் மேற்கொள்ளப்பட்ட விடயமாக இது நோன்றவில்லை. மேலும், எந்த ஒரு ஜனநாயக சீர்திருந்த முயற்சியும் சிவில் சமூகம் மற்றும் உள்ளூர் சமூக செயற்பாட்டாளர்கள் போன்ற பாதிக்கப்படும். பங்குதாரர்களுடனான ஆலோசனைச் செயற்பாட்டின் மூலமே ஆரம்பம் செய்யப்பட வேண்டும்.
நன்றி ICNL