பல்கலைக்கழக அறிவுசார் வளங்களை சூழவுள்ள மாணவர்களும் தங்களது அறிவுவிருத்திக்கும் வலுவூட்டலுக்கும் பயன்படுத்த அனுமதிக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயரிய சிந்தனையின் கீழ்; உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களின் அனுமதியுடன் அட்டாளைச்சேனை தேசிய பாடாசலையில் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவர்கள் நேற்று (21) கலை கலாச்சார பீடம் மற்றும் அஷ்ரப் ஞாபகார்த்த நூலகம் உள்ளிட்ட பல்வறு இடங்களை பார்வையிட்டதுடன் கலை கலாச்சார பீடத்தில் இடம்பெற்ற அறிவுசார் செயலமர்விலும் கலந்துகொண்டனர்.
கலை கலாச்சார பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அறிவுசார் செயலமர்வில் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் அவர்கள் பிரதான பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்வின்போது கலை கலாச்சார பீட சமூகவியல் துறையின் துறைத்தலைவர் பேராசிரியர் எஸ்.எம்.ஐயூப் அவர்கள் மாணவர்களின் உளவள விருத்தியோடு சம்மந்தப்பட்ட உரையை ஆற்றினார்.
மாணவர்களுடன் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் உதவி அதிபர் எம்.ஜெ.எம். அன்வர் நௌஷாட் , உதவி அதிபர் ஏ.ஆர்.எம். ஆஷிக், பகுதித்தலைவர் ஏ.எம். ஜெஸீல் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகளான எம். நியாஸ், ஏ.எம். சித்தீக், எம்.ஏ.சி.எம். றவூப், எம். றிஸ்லி, ஏ.சி. நிலுபா, எஸ். றுமானா மற்றும் ஏ.ஏ. நாதியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.





