கிழக்கு மாகாண ஆளுநர் ஒரு இன துவேஷி. சிங்களவரின் ஆதரவுக்காய் செயற்படும் ஒருவர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பகிரங்க குற்றச்சாற்றொன்றை முன்வைத்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்ட நிறைவேற்றம் தொடர்பில் இன்றைய தினம் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மேற்கூறியவாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,காலையில் இருந்து பல அமைச்சர்களால் கேள்விகள் முன்வைக்கப்படுகிறது.
எனக்கும் சந்தர்ப்பம் வழங்குங்கள். இவ்வாறு சந்தர்ப்பம் வழங்காத காரணத்தினால் தான் வடக்கு கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
75 வருடகாலமாக ஆட்சி அமைத்த அரசாங்கத்தின் முலம் எங்கள் மக்களுக்கு ஒரு முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவில்லை.
வேண்டாத பாலங்கள் எல்லாம் தெற்கில் அமைத்துள்ளீர்கள். கிழக்கின் போக்குவரத்து இன்றும் முடங்கிய நிலையில் காணப்படுகிறது.” என தெரிவித்தார்.
இதன் போது நாடாளுமன்றத்தில் தனக்கு கேள்விகளை எழுப்ப சந்தர்ப்பம் வழங்கவில்லை என பிரதி சபாநாயகரிடம் வாக்குவாதத்தில் சாணக்கியன் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.