Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் புகையிரத கடவை காப்பாளர்கள் போராட்டம்!

மட்டக்களப்பில் புகையிரத கடவை காப்பாளர்கள் போராட்டம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு புகையிரத கடவை காப்பாளர்கள் நேற்று மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 24 புகையிரத கடவைகளில் கடமையாற்றும் கடவை காப்பாளர்கள் தமது சேவையினை நிரந்தரமாக்கக் கோரி நேற்று (25) திகதி முதல் தொடர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 11 வருடங்களாக நிரந்தர நியமனம் இன்றி நாள் ஒன்றிற்கு 250/= ரூபாய் சம்பளத்திற்காக கடமையாற்றிவரும் இவர்களை அரசாங்கம் இவர்களை கடமையில் இருந்து நீக்கிவிட்டு ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் உள்வாங்கப்பட்டவர்களை குறித்த கடமையில் சேர்த்துக்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக்கும் இதன் போது தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு தமது நாளாந்த ஊதியமான 250/= ரூபாய் ஊடாக தமது வாழ்க்கையினை கொண்டு நடத்த முடியாது எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 கடவைகளில் 72 புகையிரத கடவை காப்பாளர்கள் இவ்வாறு நிரந்தர நியமனமின்றி கடமையாற்றி வருவதுடன், இலங்கை முழுவதுமாக 688 புகையிரத கடவைகளில் 2064 புகையிரத கடவை காப்பாளர்களாக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!
செய்திகள்

ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு – இன்றிரவு 6 ரயில் சேவைகளுக்கு பாதிப்பு!

September 16, 2026
“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை

September 16, 2026
மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு
காணொளிகள்

மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு

September 16, 2026
ஏர்பஸ் மோசடி வழக்கு; நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப்டம்பர் 23 வரை நீடிப்பு!
செய்திகள்

ஏர்பஸ் மோசடி வழக்கு; நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் செப்டம்பர் 23 வரை நீடிப்பு!

September 16, 2026
மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
அரசியல்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

September 16, 2026
Next Post
காதலிப்பதாக இளைஞன் போல் நடித்து 15 வயது மாணவியை ஏமாற்றிய யுவதி; அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் கைது!

காதலிப்பதாக இளைஞன் போல் நடித்து 15 வயது மாணவியை ஏமாற்றிய யுவதி; அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு