முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
காலை 09.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னையில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்படும் என்று இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும் பின்பு சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், காலை 10 மணிக்குப் பிறகுதான் சாந்தனின் பூதவுடல் தாங்கிய விமானம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்ததுடன், சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தையும் வந்தடைந்திருந்தது.