வரி செலுத்தாமல் முறைகேடான வழிகளில் வாகனங்களைப் பதிவு செய்ததாகக் கூறப்படும் சுமார் 5,000 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது ASP ஒலுகல தலைமையிலான குழுவினர் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகனப் பதிவுகளில் இடம்பெற்றிருக்கக்கூடிய வரி தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், சம்பவம் தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் மேலதிக விபரங்களும் வெளியாக வேண்டியுள்ளது.








