ரயில்வே தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை (05) முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை (5) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் உட்பட பல ரயில்வே தொழிற்சங்கங்கள் கைவிட்டதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.’
பணிப்பகிஷ்கரிப்பின் பிரதான பிரச்சினையான பதவி உயர்வு தொடர்பான பிரச்சினைக்கு அமைச்சரவை தீர்வை வழங்கியதால் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதாகவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.