Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கையும் தெற்கையும் இணைக்கவுள்ள விமானப் படையினர்!

வடக்கையும் தெற்கையும் இணைக்கவுள்ள விமானப் படையினர்!

2 years ago
in செய்திகள்

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவையொட்டி யாழ் முற்றவெளியில் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் விழா இடம்பெற உள்ளதாக இலங்கை விமானப் படையின் தளபதி எயார் மாஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள இலங்கை விமானப் படையின் 73 ஆவது ஆண்டு நிறைவு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை விமானப் படை 73 வருட கால வரலாற்றைக் கடந்து வந்ததை இட்டு நான் பெருமை அடைகிறேன். ரோயல் விமானப்படையாக ஆரம்பிக்கப்பட்ட எமது விமானப்படை ஆரம்ப உறுப்பினர்களாக 6 உத்தியோகத்தர்களையும் ஏனைய தரத்திலான 24 உத்தியோகத்தர்களை கொண்டதாக இருந்தது.

தற்போது நமக்கு சுமார் 20 பிராந்திய கிளைகள் காணப்படுவதுடன் அதற்கு மேலாக சுமார் 73 தொழில் வான்மை பிரிவுகளும் காணப்படுகின்றது. கல்வி மற்றும் சமூக சேவை வேலை திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து 73 வது ஆண்டு விழாவை கெளரவமான முறையில் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கின்றோம்.

அந்த வகையில் கல்வி அமைச்சின் அங்கீகாரத்துடன் வட மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 73 பாடசாலைகளில் 100 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி வேலை திட்டங்களும் ,வடக்கிற்கு என்னால் புத்தகம் என்ற வேலை திட்டத்தின் கீழ் 73ஆயிரம் தமிழ், ஆங்கில மொழி புத்தகங்களும் மற்றும் 73 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட உள்ளது.

மேலும் வட மாகாணத்தில் தல புனரமைப்பு வேலை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிலையில் பிரிவினைகளுடன் நாம் முன்னோக்கி பயணிக்க முடியாது .

ஆகவே நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு நாம் எங்களது சக்தியை பயன்படுத்துவதோடு நாட்டு மக்களிடையே இன ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு நமது பங்களிப்பை வழங்குவதோடு சமூக அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதேசமயம் இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி யாழ். முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று (06)ஆரம்பமான கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

கண்காட்சிகள் நடைபெறும் தினங்களில், விமானப் படையின் சாகச நிகழ்வுகள் கலை நிகழ்வுகள் என்பன நடைபெறவுள்ளன.

இந்த கண்காட்சிகளுக்கு பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாகவும், ஏனையோருக்கு நுழைவு கட்டணம் 100 ரூபாய் ஆகும்.

தொடர்புடையசெய்திகள்

ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!

August 1, 2026
பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை
செய்திகள்

பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை

August 1, 2026
2025 உயர்தர பரீட்சையின் முடிவுகள்! பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!
செய்திகள்

2025 உயர்தர பரீட்சையின் முடிவுகள்! பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

August 1, 2026
யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

July 31, 2026
சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

July 31, 2026
Next Post
“நீலக்கொடி கடற்கரை” ; நாட்டில் 12 கடற்கரைகள் அடையாளம்!

“நீலக்கொடி கடற்கரை” ; நாட்டில் 12 கடற்கரைகள் அடையாளம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு