நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கென புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன் மூலமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி இந்த வாரம் அறிமுகம் செய்ய கட்சி தலைமை திட்டமிடப்பட்டிருந்தது. மேலும் இதற்கான ஆலோசனையும் நடைபெற்று வந்தது. மேலும் இதற்கான செயலி மற்றும் பாஸ்வேர்ட் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் நேற்று (08) மாலை அறிமுகப்படுத்தினார். மேலும், மே மாதத்திற்குள் அதிக அளவு உறுப்பினர்களை சேர்க்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்புகள் வழங்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என்று தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.