Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யூடியூப்பிற்கு போட்டியாக எலான் மஸ்க் களமிறக்கும் செயலி!

யூடியூப்பிற்கு போட்டியாக எலான் மஸ்க் களமிறக்கும் செயலி!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

மிகப்பிரபலமான செயலியான எக்ஸ் தளத்தை (ட்விட்டர்) மாற்றும் முயற்சியில் அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு அங்கமாக, புதிய வீடியோ செயலியை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் முன்னணி வீடியோ தேடல் மற்றும் பார்வை தளமாக யூடியூப் விளங்கி வருகிறது. எலான் மஸ்கின் இந்த அதிரடி கூகுளின் முக்கிய அங்கமான யூடியூபின் சந்தையை பாதிக்கக்கூடும்.

எக்ஸ் தளத்தை இலாபகரமாக மாற்றும் முயற்சியில், 3 மணி நேர முழு திரைப்பட நீளத்திலான வீடியோக்களையும் அதில் பதிவிட எலான் மஸ்க் வசதிகள் செய்துள்ளார்.

பின்னர் எக்ஸ் பயனர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, மேற்படி வீடியோக்களை ஸ்மார்ட் டிவிக்களில் காண ஏதுவாக வீடியோ செயலி ஒன்றையும் எலான் மஸ்க் வெளியிட இருக்கிறார்.

சீனாவில் பயன்பாட்டில் இருக்கும் வீசாட் சமூக ஊடக செயலிக்கு இணையாக எக்ஸ் தளத்தை அனைத்துக்குமான சூப்பர் ஆப் ஆக மாற்றும் முயற்சியில் எலான் மஸ்க் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த வரிசையில் கடந்த அக்டோபர் மாதம் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை எக்ஸ் தளத்தின் பயனர்கள் பெறுவதற்கான வசதியை எலான் மஸ்க் வெளியிட்டார். அடுத்தபடியாக, பணப்பரிவர்த்தனைக்கான அனுகூலங்களையும் எக்ஸ் தளத்தில் உள்ளடக்க அவர் முயற்சித்து வருகிறார்.

இந்த வீடியோ செயலி ஒப்பீட்டளவில் நடப்பிலிருக்கும் யூடியூப்க்கு இணையான வசதிகளை கொண்டிருக்கும். முதற்கட்டமாக அமேசான் மற்றும் சாம்சங் ஸ்மார்ட் டிவிகள் எலான் மஸ்கின் வீடியோ செயலியை பெற இருக்கின்றன.

முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகமாகும் இந்த வசதிக்காக, மாகாணங்கள் தோறும் வங்கிகள் வாயிலாக எக்ஸ் தளத்துக்கான அனுமதி பெறும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
நாட்டின் பாதுகாப்பு வலையமைப்பை நிலைநிறுத்துவதற்கு தீர்மானம்!

நாட்டின் பாதுகாப்பு வலையமைப்பை நிலைநிறுத்துவதற்கு தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு