குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 15 வயது சிறுவனை பாரிய பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக குருணாகல் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (10) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இரண்டாவது சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிகிச்சை பெற்று வந்த சிறுவனை சிகிச்சை பிரிவின் குளியலறைக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது.