Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரோமானியாவில் இலங்கையர் செலுத்திய வேன் விபத்து; ஒன்பது பேர் காயம்

ரோமானியாவில் இலங்கையர் செலுத்திய வேன் விபத்து; ஒன்பது பேர் காயம்

53 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஐரோப்பிய நாடான ரோமானியாவில் இலங்கையர் ஒருவர் செலுத்திச் சென்ற வேன் எதிர்த்திசையில் பயணித்து கார் ஒன்றுடன் மோதியதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய 35 வயதுடைய இலங்கையர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Navodari மற்றும் Lumina நகரங்களுக்கு இடையிலான வீதியில் கடந்த திங்கட்கிழமை காலை 6.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கொன்ஸ்டன்டாவிலிருந்து Tulcea நோக்கி வேனைச் செலுத்திச் சென்ற இலங்கையர், வீதியின் வலதுபுற வளைவில் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார்.

இதன்போது, வேன் எதிர்த்திசையில் நுழைந்து 22 வயதுடைய பெண் ஒருவர் செலுத்தி வந்த கார் மீது மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் 45 வயதுடைய ஆண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். மேலும், வேனைச் செலுத்திய இலங்கையர் உள்ளிட்ட அதில் பயணித்த இலங்கையர்கள் ஆறு பேரும், காரைச் செலுத்திய பெண்ணும் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் இலங்கையரின் சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றவியல் வழக்குப் பதிவு செய்துள்ள ரோமானிய பொலிஸார், விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நவம்பர் முதலாம் திகதி முதல் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடு; TIN சான்றிதழ் கட்டாயம்!
செய்திகள்

நவம்பர் முதலாம் திகதி முதல் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடு; TIN சான்றிதழ் கட்டாயம்!

October 30, 2026
செல்லப்பிராணிகள் பராமரிப்பு நிலையத்தில் நாய் கொ. லை; இருவர் பிணையில் விடுதலை!
செய்திகள்

செல்லப்பிராணிகள் பராமரிப்பு நிலையத்தில் நாய் கொ. லை; இருவர் பிணையில் விடுதலை!

October 30, 2026
நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கை!
செய்திகள்

நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கை!

October 30, 2026
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஊழல் விசாரணை தீவிரம்; முழுமையான கணினித் தரவுகள் ஆய்வு!
செய்திகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஊழல் விசாரணை தீவிரம்; முழுமையான கணினித் தரவுகள் ஆய்வு!

October 30, 2026
“ஒரு போத்தல் சாராயத்திற்கும் ரூ.1,000 ரூபாய் பணத்திற்கும் விற்கப்படும் பொலிஸ் படையே எம்மிடம் உள்ளது!” ; பௌத்த துறவி கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

“ஒரு போத்தல் சாராயத்திற்கும் ரூ.1,000 ரூபாய் பணத்திற்கும் விற்கப்படும் பொலிஸ் படையே எம்மிடம் உள்ளது!” ; பௌத்த துறவி கடும் குற்றச்சாட்டு

October 30, 2026
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து நான்கு வாகனங்கள் சேதம்; இருவர் காயம்!
செய்திகள்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து நான்கு வாகனங்கள் சேதம்; இருவர் காயம்!

October 30, 2026
Next Post
நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கை!

நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு