Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாணவர்களின் கல்வி விடயத்தில் விளையாடும் அரச பேருந்துகள்; வடமாகாண ஆளுநரிடம் தீர்வை வலியுறுத்தும் பொதுமக்கள்!

மாணவர்களின் கல்வி விடயத்தில் விளையாடும் அரச பேருந்துகள்; வடமாகாண ஆளுநரிடம் தீர்வை வலியுறுத்தும் பொதுமக்கள்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிளிநொச்சி முகமாலை பகுதியில் பாடசாலைக்கு செல்ல காத்திருந்த மாணவர்களை பஸ்களில் ஏற்றாது , பயணித்து சென்ற அரச பேருந்தை அங்கிருந்த பெற்றோர் ஒருவர் மறித்து மாணவர்களை ஏற்றிவிட்டசம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை 7.40 வரை எந்தவொரு பஸ்ஸும் மாணவர்களை ஏற்றாது பயணித்துள்ள நிலையிலேயே குறித்த பெற்றார் அதிரடி நடவடிக்கை இறங்கி மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுவதனால் மாணவர்கள் பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு போக முடியாத நிலை காணப்படுகின்றதாக பாதிக்கப்பட்ட மாணர்களின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

அதிகாலைல் சீக்கிரம் பாடசாலை செல்ல பஸ் தரிப்பிடத்தில் காத்திருக்கும் மாணவர்களை பேருந்துக்கள் ஏற்றாது விட்டுச்செல்வதனால் சில சமயங்களில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் விடும் சூழலும் காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இதனை அடுத்து பெற்றோர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பஸ்ஸூக்கு குறுக்காக நிறுத்தி மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பிரச்சினையானது, எழுதுமட்டுவாள் தொடக்கம் இயக்கச்சி வரையான சுமார் 8 க்கு மேற்பட்ட பிரதேசங்களில் காணப்படுகிறது.

பாடசாலைகள் கற்றல் செயற்பாடுகள் 7.30க்கு ஆரம்பிக்கும் நிலையில், இவ்வாறு மாணவர்கள் பிந்தி செல்லுதல் மற்றும், செல்லாதுவிடல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்கின்றனர்.

மன உளைச்சலுக்கு மாணவர்கள் ஆளாவதுடன், கல்வியில் ஆர்வம் காட்டுதல் மற்றும் பூரண கல்வியை பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அத்துடன், பாடசாலை இடைவிலகலுக்கும் உந்துதலை கொடுக்கும் அபாயமும் காணப்படுகிறது.

மாணவர்களின் கல்வி மற்றும் இணை செயற்பாடுகளிற்கு ஊக்கமளிக்கும் வகையில், அந்த பிரதேச மாணவர்களின் போக்குவரத்தினை சீர் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பினரிடமும் உள்ளது.

எனவே மாணவர்களின் நலன் கருதி இது தொடர்பில் வடமாகாண ஆளுநர் நேரடியாக தலையீடு செய்து, உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
ஒன்றரை நாள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள அரச பல்கலைக்கழக ஊழியர்கள்!

ஒன்றரை நாள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள அரச பல்கலைக்கழக ஊழியர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு