மாத்தறை, குடாவெல்ல கடற்பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களுடன் கூடிய மீன்பிடிப் படகு காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கில் இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருவதாகக் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.









