Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆபாச படம் வைத்திருந்தவர் மீது பாய்ந்தது பயங்கரவாதத் தடைச் சட்டம்; இலங்கையில் இப்படியும் சம்பவம்!

ஆபாச படம் வைத்திருந்தவர் மீது பாய்ந்தது பயங்கரவாதத் தடைச் சட்டம்; இலங்கையில் இப்படியும் சம்பவம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தனது தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசியில் பாலியல் வீடியோக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடரப்பட்ட வழக்கில் சந்தேக நபரான 35 வயதுடைய திருமணமான ஒருவரை விடுதலை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று (15) உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கூறப்பட்ட பாலியல் காட்சிகளை யாருக்கும் விநியோகிக்கவில்லை, ஆபாசமான பாலியல் காட்சிகளை வைத்திருந்தமை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எவ்வாறு குற்றமாக கருதப்படுகின்றது என சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தீஷ்ய வேரகொடவின் சமர்ப்பணங்களை பரிசீலித்த மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அமைச்சர் ஒருவர் மற்றும் மற்றுமொரு நபர் தொடர்பில் இணையத்தில் வெளியிட்ட குறிப்பின் அடிப்படையில் தனது கட்சிக்காரரை கைது செய்தமை தொடர்பான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சட்டத்தரணி தீஷ்ய வேரகொட நீதிமன்றில் தெரிவித்தார்.

மேலும், புகார்தாரரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலம் மற்றும் பிற ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சட்டத்தின் பிரகாரம் பாலியல் வீடியோக்களை வைத்திருப்பது குற்றமல்ல எனவும், அவற்றை இணையத்தளத்திலோ அல்லது வேறு வழிகளிலோ எவருக்கும் விநியோகிக்கவில்லை எனவும் சட்டத்தரணி தீஷ்ய வேரகொட நீதிமன்றில் சுட்டிக்காட்டினார். விசாரணை அதிகாரிகள் தனது கட்சிக்காரரின் கைத்தொலைபேசியை கைப்பற்றி அவர்களுக்கிடையில் பாலியல் வீடியோக்களை பகிர்ந்து மகிழ்ந்ததாக நீதிமன்றில் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி தீஷ்ய வேரகொட, குற்றச்சாட்டை தனது கட்சிக்காரர் மீது சுமத்த முடியாது என நீதிமன்றில் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
Next Post
கோட்டாவை கொல்ல சிங்களவர்கள் வரவில்லை- முஸ்லிம்கள் தான் வந்தார்கள்; சுகேஸ்வர பண்டார குற்றச்சாட்டு!

கோட்டாவை கொல்ல சிங்களவர்கள் வரவில்லை- முஸ்லிம்கள் தான் வந்தார்கள்; சுகேஸ்வர பண்டார குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு