Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மைத்திரி-கருணா-பிள்ளையானை கைது செய்ய வேண்டும்; யோகேஸ்வரன் அதிரடி!

மைத்திரி-கருணா-பிள்ளையானை கைது செய்ய வேண்டும்; யோகேஸ்வரன் அதிரடி!

2 years ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

“ஈஸ்டர் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிபால சிறிசேன, கருணா அம்மான், பிள்ளையான் ஆகிய இவர்களுக்கிடையே ஏதோ ஒன்று மறைந்திருக்கின்றது. இவர்களை விசாரித்தால் உண்மை வெளிவரும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“கருணா படையணி என்பது வழமையான செயற்பாடு, தேர்தல் நெருங்குகின்றது. தேர்தலுக்கான நாடகம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை பூரண அதிகாரத்துடன் மீட்டு தருவதாக கூறி தமிழ் தேசிய மக்களுக்கு வாக்களிக்க இருந்த மக்கள் எல்லோரையும் தன்பக்கம் திசைதிருப்பி, வாக்குகளை சிதறடித்து, அந்த மாவட்டத்தில் தமிழ் மக்கள் பிரதி நிதி ஒருவர் வராமல் செய்து, முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க பெருமை செய்தவர்.

இப்போது அவர் ஒரு செயலணிபோட்டு, குழு போட்டு செயற்படவந்துள்ளார். இது தேர்தலுக்காக மேற்கொள்ளும் ஒரு நாடகம். அவரது ஏமாற்று வேலை எல்லாம் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். எனவே அவர் வடக்கு கிழக்கை இணைக்க தேவையில்லை அவர் சும்மா இருந்தால் போதும் எங்கள் மக்களுக்கு எதை பெறுவது என்று தெரியும் அதை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

அதேநேரத்தில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பாக தற்போது பலரின் வாயில் வித்தியாசமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றது. பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனின் ஆலோசகராக இருந்து சுவிஸ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஆசாத்மௌலான சனல் 4 ஊடகத்தில் பிள்ளையானை குற்றவாளி என தெரிவித்துள்ளார்.

ஆனால் பிள்ளையான் இன்று ஈஸ்டர் குண்டு தாக்குதலை வைத்து ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றார். இதே நேரத்தில் முன்னாள் அதிபர் மைதிரிபால சிறிசேன காலத்தில் இந்த குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. அவர் அப்போது வாய்திறக்காமல் அதிபர் பதவி இழந்து நீண்ட காலத்தின் பின் தற்போது வாயை திறந்து தனக்கு சூத்திரதாரியை தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

ஆகவே சட்டத்தின் மத்தியில் சாட்சியங்கள் மறைக்கப்பட்டாலும் இந்த சாட்சியம் ஏற்கனவே சொல்லப்படாது இருந்தது பாரிய குற்றம். ஆகவே அவர் மீது தீவிரமான விசாரணை நடாத்தப்பட்டு சரியான தகவலை தரவில்லை எனில் சட்டத்தின் முன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதுதவிர ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக ஆசாத் மௌலான பிள்ளையான் தொடர்பாக தெரிவித்ததையும் பிள்ளையான் புத்தகம் வெளியிட்டுள்ளது தொடர்பாக கருணா அம்மான் கருத்து தெரிவித்துள்ளார்.

இவர்கள் எல்லோரும் கூட்டாக விசாரிக்கப்படவேண்டும், ஏதே ஒன்று இவர்களுக்குள் மறைந்திருக்கின்றது.

எனவே இந்தக் கருத்துக்களை வெளியிட்டு குற்றம் சாட்டும் முன்னாள் அதிபர் மைத்திபால சிறிசேன, கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன், ஆகிய 3 பேரை அரசாங்கம் கைது செய்து சரியாக விசாரித்தால் இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி கைது செய்யப்படுவார்.

எனவே அதிபர் விசேட குழு ஒன்றை அமைத்து அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அரசையும், அதிபரையும் கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.

தொடர்புடையசெய்திகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!
உலக செய்திகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!

September 19, 2026
உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்
சிறப்பு கட்டுரைகள்

உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்

September 19, 2026
யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது
செய்திகள்

யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது

September 19, 2026
திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிதியச் சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்!
செய்திகள்

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிதியச் சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்!

September 19, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!

September 19, 2026
ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை சட்டத்தில் கையெழுத்திட்ட ட்ரம்ப்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை சட்டத்தில் கையெழுத்திட்ட ட்ரம்ப்!

September 19, 2026
Next Post
முஸ்லிம் கடைகளில் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை; இனவாதம் குறித்து மனுஷ நாணயக்கார!

முஸ்லிம் கடைகளில் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை; இனவாதம் குறித்து மனுஷ நாணயக்கார!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.