Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருமணமான அன்றே கடிதம் எழுதி வைத்துவிட்டு கணவன் தற்கொலை!

திருமணமான அன்றே கடிதம் எழுதி வைத்துவிட்டு கணவன் தற்கொலை!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்தியா விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் இராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் இராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இ ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு இராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் இராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் பொலிஸார் இராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை பொலிஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் இராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த இராதாகிருஷ்ணன் பெண்ணிடம் தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் இராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பிறகு விசாரணை செய்த பொலிஸாரிடம் இராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், ‘என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை எப்படி வாழ முடியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொலிஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!
செய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!

September 19, 2026
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!
உலக செய்திகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!

September 19, 2026
உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்
சிறப்பு கட்டுரைகள்

உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்

September 19, 2026
யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது
செய்திகள்

யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது

September 19, 2026
திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிதியச் சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்!
செய்திகள்

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிதியச் சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்!

September 19, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!

September 19, 2026
Next Post
இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை 57 இலட்சத்திற்கும் அதிகமானது!

இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை 57 இலட்சத்திற்கும் அதிகமானது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.