Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீதி விதி முறைகளை மீறுவோர் தொடர்பில் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

வீதி விதி முறைகளை மீறுவோர் தொடர்பில் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டுக் காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு விபத்துக்களை குறைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கிறது.

பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதாலேயே 36% விபத்துகள் ஏற்படுவதாகவும், அதனால் 17% ஆனோர் கண் பாதிப்புகளுக்கு ஆளாவதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு விபத்துக்களை மட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை போக்குவரத்து அமைச்சு, சுகாதார அமைச்சு என்பன இணைந்து முன்னெடுக்கவுள்ளன.

அதன்படி, பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்களை மட்டுப்படுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக போக்குவரத்து அமைச்சு மற்றும் வீதி பாதுகாப்பு தேசிய சபை ஆகியன நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (09) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது.

இதன்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் சஜித் ரணதுங்க, நேருக்கு நேராக முச்சக்கர வண்டிகள் மோதிக்கொள்வதால் இடம்பெறும் விபத்துக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் மக்கள் கடுமையான விபத்துக்களில் சிக்கியவர்கள் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் அதிகளவு அதிவேக வீதிகளுக்கு வெளியில் இடம்பெறும் விபத்துக்களிலேயே அதிகளவானோர் மரணிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அதனால் நாளாந்தம் 10 பேர் வரையில் உயிரிழப்பதாகவும், விபத்துக்களை மட்டுப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதனையடுத்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் நவோமி ஜயவர்தன, பண்டிகைக் காலத்தில் பேருந்துகளினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளை விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் தொடர்பில் 1955 என்ற அவசர இலக்கத்திற்கு 24 மணித்தியாலங்களும் அறிவிக்க முடியும் என்பதோடு, கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு உடனடியாக பதிலளிக்க அதிகாரிகள் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புடையசெய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!
செய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

September 19, 2026
பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!
செய்திகள்

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!

September 19, 2026
மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

September 19, 2026
வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்
செய்திகள்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

September 19, 2026
Next Post
மட்டு நகர ஜாமியூஸ் சலாம் ஜும்மா பள்ளிவாசலில் நோன்பு பெருநாள் விசேட தொழுகை!

மட்டு நகர ஜாமியூஸ் சலாம் ஜும்மா பள்ளிவாசலில் நோன்பு பெருநாள் விசேட தொழுகை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு