Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பூனையால் வந்த வாக்குவாதம்- மாவட்ட நீதிபதியை காதில் அறைந்த சப் இன்ஸ்பெக்டர்; அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு!

பூனையால் வந்த வாக்குவாதம்- மாவட்ட நீதிபதியை காதில் அறைந்த சப் இன்ஸ்பெக்டர்; அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புத்தாண்டுக்காக காலி லபுதுவ பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்குச் சென்ற பத்தேகம மாவட்ட நீதிபதி ஒருவரை கடுமையான வார்த்தைகளால் தூஷித்து, அறைந்த குற்றச்சாட்டில் அவரது மைத்துனரான உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவரை அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் பத்தேகம மாவட்ட நீதிபதியின் மனைவியின் சகோதரராவார்.

பத்தேகம மாவட்ட நீதிபதி எல். கே. ஜி விஸ்வநாத் தனது மனைவி மற்றும் செல்லப் பிராணியான பூனையுடன் காலி, லபுதுவ பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் தாயின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற மறுநாளான 16 ஆம் திகதி இரவு மாவட்ட நீதிபதி தனது மனைவி மற்றும் பூனையுடன் தனது வீட்டிற்குச் செல்ல தயாரான போது அவரது பூனை காணாமல் போயுள்ளது.

தனது பூனை காணாமல் போனது தொடர்பில் மாவட்ட நீதிபதிக்கும் அவரது மைத்துனரான சப் இன்ஸ்பெக்டருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சந்தேக நபர் நீதிபதியைத் தூஷித்து அவரது காதில் அறைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மாவட்ட நீதிபதி அக்மீமன பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸ் அதிகாரி ஒருவர் விசாரணைக்குச் சென்றுள்ளார்.

பொலிஸ் அதிகாரியைக் கண்ட மாவட்ட நீதிபதியின் மனைவி அதிர்ச்சியில் சுகயீனமுற்றுள்ளார்.

இதனையடுத்து அவர் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரான சப் இன்ஸ்பெக்டர் அக்மீமன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காலி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

குறித்த செல்லப் பூனை மாவட்ட நீதிபதியின் காருக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது
செய்திகள்

கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது

August 9, 2026
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
செய்திகள்

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

August 9, 2026
சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
செய்திகள்

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

August 9, 2026
சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்
செய்திகள்

சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

August 9, 2026
பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை
செய்திகள்

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை

August 9, 2026
Next Post
காத்தான்குடி சிறுவர் இல்லத்துக்கு ஜனாதிபதியின் புத்தாண்டு பரிசு!

காத்தான்குடி சிறுவர் இல்லத்துக்கு ஜனாதிபதியின் புத்தாண்டு பரிசு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு