கடை ஒன்றில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவிய சந்தேகநபர்கள் மூவரை பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடந்த மார்ச் 11 ஆம் திகதி பிடிகல, நியாகம பிரதேசத்தில் கடை ஒன்றில் வைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் சாரதியை ஏற்றிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் மூவரும் ‘கரந்தெனிய சுத்தா’ மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான சமன் கொல்லா ஆகியோரின் நெருங்கிய சகாக்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 22, 24 மற்றும் 31 வயதுடைய கஹதுவ, உனன்பிட்டிய மற்றும் தவலம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 3 கையடக்க தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பிடிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.