Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
23 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கட்டுநாயக்கவில் கைது!

23 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கட்டுநாயக்கவில் கைது!

20 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சுமார் 23 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் மற்றும் ஹஷீஷ் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்தி வந்த இந்தியப் பிரஜை ஒருவர் இன்று (07) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்திலிருந்து போதைப்பொருட்களை வெளியே கொண்டு செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 வயதுடைய வர்த்தகர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இன்று அதிகாலை சுமார் 12 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து வந்த விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த பயணப் பையைச் சோதனையிட்டபோது, புளித்தொப்பிகள் அடங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்த நான்கு தகரப் பெட்டிகளுக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 102 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆறு டொபி பொதிகளிலிருந்து 5 கிலோ 260 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சந்தேகநபரைத் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கான உத்தரவைப் பெற பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை கட்டமைப்பு சீரமைப்பு; ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!
செய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை கட்டமைப்பு சீரமைப்பு; ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!

November 7, 2026
தீபாவளியை முன்னிட்டு 4 மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை!
செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு 4 மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை!

November 7, 2026
பிறந்தநாளன்றே கோர விபத்தில் உயிரிழந்த பொலன்னறுவை வைத்தியசாலை அறுவை சிகிச்சை நிபுணர்!
செய்திகள்

பிறந்தநாளன்றே கோர விபத்தில் உயிரிழந்த பொலன்னறுவை வைத்தியசாலை அறுவை சிகிச்சை நிபுணர்!

November 7, 2026
மாதிவெலயில் ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 25 வயது இளைஞர் கைது!
செய்திகள்

மாதிவெலயில் ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 25 வயது இளைஞர் கைது!

November 7, 2026
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

November 7, 2026
“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதி டிரம்ப்!” – ரவூப் ஹக்கீம் கடும் விமர்சனம்
செய்திகள்

“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதி டிரம்ப்!” – ரவூப் ஹக்கீம் கடும் விமர்சனம்

November 6, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு