Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் பல்கலை உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதியாக வேல்நம்பி தெரிவு!

யாழ் பல்கலை உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதியாக வேல்நம்பி தெரிவு!

2 years ago
in செய்திகள்

யாழ் பல்கலை உயர் பட்டப்படிப்புக்கள் பீடாதிபதியாக வேல்நம்பி தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய பீடதிபதி பேராசிரியர் செ. கண்ணதாசனின் பதவிக்காலம் எதிர்வரும் 26 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்கான விசேட பேரவை அமர்வு துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.

பீடாதிபதி தெரிவுக்காக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், கணக்கியல் துறை சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி, விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கு. வேலாயுதமூர்த்தி மற்றும் விலங்கியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் க. கஜபதி ஆகியோர் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

பீடாதிபதி தெரிவுக்கு ஆர்வத்தை வெளிப்படுத்தியவர்களின் சுய சமர்ப்பணம் இடம்பெற்றது.

இதன்போது இரண்டு பேராசிரியர்களே சுய சமர்ப்பணத்துக்கு வருகை தந்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பேரவை உறுப்பினர்களிடையே இடம்பெற்ற வாக்களிப்பின் போது சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் நிலை பெற்று உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் அடுத்த பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இவர் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் அடுத்துவரும் மூன்றாண்டுகளுக்குப் பீடாதிபதியாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!

June 19, 2026
வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!
செய்திகள்

வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

June 19, 2026
செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!
செய்திகள்

செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!

June 19, 2026
கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

June 19, 2026
கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
செய்திகள்

கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!

June 19, 2026
60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை
செய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை

June 19, 2026
Next Post
நடிகர் விஜய் மீது பொலிஸில் முறைப்பாடு!

நடிகர் விஜய் மீது பொலிஸில் முறைப்பாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு