நாடாளவிய ரீதியில் கறவை பசுக்கள் திருடப்படும் சம்பவங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராயும் நோக்கில் விவசாயத்துறை அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஒரு மாவட்டத்தில் சராசரியாக பசுக்கள் திருடப்படும் சம்பவங்கள் குறைந்தது 5 தொடக்கம் 6 பதிவாவதாக இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்தகைய திருட்டு சம்பவங்களில் குறிப்பிட்ட சந்தேகநபர்கள் அதிசொகுசு வாகனங்களில் வந்து இந்த கறவை பசுக்களை கடத்திச் செல்வதாக தெரிய வந்துள்ளது.
இத்தகைய திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகளை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இங்கு தெரிவித்தார்.