வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவானது, வரும் 2024 மே 2 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்படியாக, பத்தரமுல்ல, ஸ்ரீ சுபுத்திபுர வீதியிலுள்ள, ‘சுஹுருபாய’ இன் 16 ஆம் தளத்திலுள்ள புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
அன்றைய தினத்திலிருந்து, புதிய அலுவலக இடத்தில், வழமையான அலுவலக நேரங்களான திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 8.30 முதல் மாலை 4.15 வரை சகல கொன்சியுலர் சேவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
‘சுஹுருபாய’ இலுள்ள புதிய கொன்சியுலர் அலுவலகத்தில், மின்னியல் ஆவண அத்தாட்சிப்படுத்தல் முறைமையை (e-DAS) மாற்றம் செய்வதற்கு வசதியேற்படுத்திக் கொடுப்பதற்காக, கொழும்பிலுள்ள கொன்சியுலர் பிரிவினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஆவண அத்தாட்சிப்படுத்தல் சேவைகள், 2024 ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.