Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கால்வாயொன்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு!

கால்வாயொன்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு!

2 years ago
in செய்திகள்

பொலன்னறுவை, வெலிகந்த பகுதியில் கால்வாயொன்றில் தவறி விழுந்த குழந்தையொன்று சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் நீரில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (26) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் வெலிகந்த பகுதியை சேர்ந்த இரண்டு வயது ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குழந்தையின் தாய் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காகக் குழந்தையை மூத்த மகளிடம் ஒப்படைத்துள்ளார். இதன்போது குழந்தை வீட்டின் பின்புறமுள்ள வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அருகிலிருந்த கால்வாயில் தவறி வீழ்ந்து நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

இதனைக் கண்ட வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள தனியார் நெல் ஆலையொன்றின் ஊழியர் ஒருவராலும் அங்குள்ள சிலராலும், குழந்தை மீட்கப்பட்டு அவசர அம்பியூலன்ஸ் சேவை மூலம் குழந்தையை வெலிகந்த வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது குழந்தை உயிரிழந்துள்ளதாகவும், குழந்தையின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தை நீரில் அடித்து செல்லப்பட்ட வேளை, குழந்தையின் தந்தை தோட்டத்திற்குப் பின்புறம் உள்ள மாட்டுப் பண்ணையிலிருந்ததாகவும் மூத்த சகோதரி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

நெல் உமிக்குள் பாலை மரக்குற்றிகள் மறைத்து கடத்தல்; கிளிநொச்சியில் லொறி சுற்றிவளைப்பு!
செய்திகள்

நெல் உமிக்குள் பாலை மரக்குற்றிகள் மறைத்து கடத்தல்; கிளிநொச்சியில் லொறி சுற்றிவளைப்பு!

August 29, 2026
பொலன்னறுவையில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி!
செய்திகள்

பொலன்னறுவையில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி!

August 29, 2026
மட்டக்களப்பில் அரச எரிபொருள் கொள்வனவில் பல இலட்சம் ரூபாய் முறைகேடு; ராஜ்குமார் குற்றச்சாட்டு!
செய்திகள்

மட்டக்களப்பில் அரச எரிபொருள் கொள்வனவில் பல இலட்சம் ரூபாய் முறைகேடு; ராஜ்குமார் குற்றச்சாட்டு!

August 29, 2026
இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள ஈரானிய கப்பல்கள்; அரசாங்கம் தீவிர கண்காணிப்பு!
செய்திகள்

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள ஈரானிய கப்பல்கள்; அரசாங்கம் தீவிர கண்காணிப்பு!

August 29, 2026
இன்று நள்ளிரவு முதல் ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட உணவுகளின் விலை அதிகரிப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட உணவுகளின் விலை அதிகரிப்பு!

August 29, 2026
கடல்சார் போக்குவரத்து தடைகளுக்கு மத்தியிலும் எண்ணெய் வருவாய் இலக்கை எட்டிய ஈரான்!
செய்திகள்

கடல்சார் போக்குவரத்து தடைகளுக்கு மத்தியிலும் எண்ணெய் வருவாய் இலக்கை எட்டிய ஈரான்!

August 29, 2026
Next Post
மாட்டின் மீது மோதி மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் பலி!

மாட்டின் மீது மோதி மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு