Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மனித உரிமைகள் ஆணையாளரும் புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கைப்பாவையா?; அறிக்கையை எதிர்க்கும் சரத் வீரசேகர

மனித உரிமைகள் ஆணையாளரும் புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கைப்பாவையா?; அறிக்கையை எதிர்க்கும் சரத் வீரசேகர

9 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சாட்சியங்கள், தாக்குதலுக்குள்ளான மருத்துவ நிலையங்களில் இருந்த சாதாரண மக்களிடமிருந்து பெறப்பட்டவை எனவும், அவர்களைப் பணம் கொடுத்து விரும்பிய கருத்துக்களைத் தெரிவிக்கச் செய்ய முடியும் எனவும் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தாம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், மனித உரிமைகள் ஆணையாளரும் புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கைப்பாவையாகச் செயற்படுகிறாரா என்ற சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், குறித்த சாட்சியங்களைப் பரணகம ஆணைக்குழுவுடன் இணைக்கப்பட்டிருந்த ஆறு சர்வதேச யுத்த நிபுணர்களிடம் பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். அந்த நிபுணர்கள் இலங்கை இராணுவம் யுத்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், பொதுமக்களைப் பாதுகாத்து மனிதாபிமான முறையில் யுத்தத்தை வெற்றி கொண்டதாகவும் கூறியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, யுத்த காலத்தில் வடக்கிற்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பிய விதம் பாராட்டுக்குரியது என அப்போதைய ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் நீல் புனே தெரிவித்திருந்ததாகவும் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் அப்போதைய இலங்கைப் பிரதிநிதி அமின் அவாட், கடுமையான யுத்தச் சூழலிலும் வடக்கிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிய விதம் உலகிற்கு முன்னுதாரணமாக அமைந்ததாகத் தெரிவித்திருந்தார் என்றும் அவர் மேலும் கூறினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும்போது கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்லத் தடையில்லை
செய்திகள்

பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும்போது கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்லத் தடையில்லை

November 27, 2026
இலங்கையில் இடம்பெற்ற போர்க்கால படுகொலைகளுக்கு அரசை பகிரங்க மன்னிப்பு கோருமாறு ஐ.நா அறிக்கை!
செய்திகள்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்கால படுகொலைகளுக்கு அரசை பகிரங்க மன்னிப்பு கோருமாறு ஐ.நா அறிக்கை!

November 27, 2026
சந்திவெளியில் மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது!
காணொளிகள்

சந்திவெளியில் மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது!

November 27, 2026
நாடளாவிய பணிப்புறக்கணிப்புக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் ஆதரவு!
செய்திகள்

நாடளாவிய பணிப்புறக்கணிப்புக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் ஆதரவு!

November 27, 2026
சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் டிசம்பர் 11ஆம் திகதி வரை நீடிப்பு!
செய்திகள்

சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் டிசம்பர் 11ஆம் திகதி வரை நீடிப்பு!

November 27, 2026
மாணவர் செவிலியர் ஆட்சேர்ப்பு நேர்காணல்; பதுளை, மொனராகலை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

மாணவர் செவிலியர் ஆட்சேர்ப்பு நேர்காணல்; பதுளை, மொனராகலை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

November 27, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு