ஹொரணை ,பொருவதன்ட பிரதேச களு கங்கையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று (26) மாலை களு கங்கையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து இவர் பிரதேசவாசிகளின் உதவியுடன் காப்பாற்றப்பட்டு ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.