மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான சந்திவெளி திகிலியூர் நாவலம்பிட்டி அருள் மிகு ஸ்ரீ கொடி மலை மகேஸ்வரர் ஆலயத்தின் 4 ஆவது வருடாந்த மகோற்சவப் பெரு விழா ஞாயிற்றுக் கிழமையன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
அதன் அடிப்படையில் 10 நாட்கள் திரு விழாக்கள் நடைபெற்று எதிர்வரும் 07.05.2024 செவ்வாய் கிழமையன்று குரோதி வருடம் அமாவாசை திதியோடு கூடிய சுபவேளையில் சிவபெருமானுக்கு திகிலியூர் கங்கை தீர்த்தோற்சவம்சிறப்பாக நடைபெறும்.
நேற்று திங்கள் கிழமை திரு விளக்கு பூசை, 6ஆம் நாள் வெள்ளிக் கிழமை மாம்பழத் திருவிழா,8 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை வேட்டைத் திருவிழா 9 ஆம் நாள் திங்கள் கிழமை பாற்குட பவனியும் நடைபெறவுள்ளது.
ஆலய பிரதம குருவும் ஆதின தர்மகர்த்தாவுமான சிவ பூஜா துரந்தர் சிவஸ்ரீ சங்கரடினேந்திரராஜ குருவின் வழிகாட்டலில் மாகோற்சவ பிரதிஷ்டா பிரதம குரு சிவஸ்ரீ த.லிங்கேஸ்வர குருக்கள் உற்சவ கால திருவிழாக்களை நடாத்துவார்.