Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அங்கொடை லொக்காவின் சகா கைது!

அங்கொடை லொக்காவின் சகா கைது!

2 years ago
in செய்திகள்

இலங்கையின் பிரதான பாதாள உலகக் கும்பலில் அங்கம் வகித்த ‘அங்கொட லொக்காவின் பிரதான சகா போலி கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக அண்மையில் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி அடையாள இயந்திரத்தின் மூலம் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் ‘சிட்டி’ என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் அங்கொட பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இவர் 10 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தியமை தொடர்பில் முல்லேரிய பொலிஸ் நிலையத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சந்தேகநபர் கைது செய்யப்படும் போது, போலி பெயரில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை மற்றும் 10 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், 2011 ஆம் ஆண்டு வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் ஒருவரை சுட்டுக் கொன்றமை, துப்பாக்கிகளை வைத்திருந்தமை உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் சந்தேகநபர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

சட்டவிரோத மீன்பிடி ஒழிப்பு நடவடிக்கையில் 27 பேர் கைது; 12 படகுகள் கைப்பற்றல்!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி ஒழிப்பு நடவடிக்கையில் 27 பேர் கைது; 12 படகுகள் கைப்பற்றல்!

July 4, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!
காணொளிகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

July 4, 2026
சூரியபுரவில் காட்டு யானை தாக்கி 45 வயது நபர் உயிரிழப்பு!
செய்திகள்

சூரியபுரவில் காட்டு யானை தாக்கி 45 வயது நபர் உயிரிழப்பு!

July 4, 2026
மேல் மாகாணத்தில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
செய்திகள்

மேல் மாகாணத்தில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

July 4, 2026
சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம் இன்று திறப்பு!
செய்திகள்

சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம் இன்று திறப்பு!

July 4, 2026
ஜனாதிபதியின் உரைக்கு எதிராகக் குரல் எழுப்பும் உண்மை தேடுபவர்கள் அமைப்பு
செய்திகள்

ஜனாதிபதியின் உரைக்கு எதிராகக் குரல் எழுப்பும் உண்மை தேடுபவர்கள் அமைப்பு

July 4, 2026
Next Post
மட்டு காந்தி பூங்காவில் கஜ முத்துக்களுடன் ஒருவர் கைது!

மட்டு காந்தி பூங்காவில் கஜ முத்துக்களுடன் ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு