Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்; அரசாங்கம் முக்கிய தீர்மானம்!

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்; அரசாங்கம் முக்கிய தீர்மானம்!

28 minutes ago
in செய்திகள்

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நீண்டகாலமாகத் தொண்டர் ஆசிரியர்களாகப் பணியாற்றி வருபவர்களின் நியமனம் தொடர்பில் அரசாங்கம் விரைவில் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தற்போது பணியாற்றும் தொண்டர் ஆசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களின் சேவைக் காலம் மற்றும் அவர்களுக்கு உதவி ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்காக அமைச்சு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர், 2007ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, நாடளாவிய ரீதியில் 4,700 தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் உதவியாளர்களாக இணைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், அந்தத் தீர்மானத்திற்குப் பின்னர் மத்திய அரசாங்கம் அல்லது மாகாண சபைகள் ஊடாக புதிதாக தொண்டர் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொண்டர் ஆசிரியர்கள் தொடர்பில் எவ்வித கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை என்பதுடன், 2009ஆம் ஆண்டில் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்காக மாத்திரம் ஆசிரியர் உதவியாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, 1990ஆம் ஆண்டு முதல் கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்களில், குறைந்தது மூன்று வருட சேவையைப் பூர்த்தி செய்தவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை 2019ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுமார் 750 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், யுத்த காலத்திலும் 2004ஆம் ஆண்டு சுனாமிப் பேரனர்த்தத்தின் போதும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சேவையாற்றிய 193 தொண்டர் ஆசிரியர்கள் அந்த நியமன வாய்ப்பிலிருந்து விடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அவர்களில் பலர் 45 வயதைக் கடந்துள்ள நிலையில், அரச நியமனங்களைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், அவர்களின் எதிர்காலம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர், நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பான தகவல்களும் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும்போது கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது பாடசாலைகளில் தொடர்ந்தும் பணியாற்றி வரும் தொண்டர் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பில் விரைவில் உரிய தீர்மானமொன்று எடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு விநியோகிக்க முடியாவிட்டால் வெற்றுச் சிலிண்டருக்கான பணத்தை மீள வழங்க உத்தரவு!
செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு விநியோகிக்க முடியாவிட்டால் வெற்றுச் சிலிண்டருக்கான பணத்தை மீள வழங்க உத்தரவு!

November 17, 2026
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 61 பேர் கடற்படையினரால் கைது; 18 படகுகளும் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 61 பேர் கடற்படையினரால் கைது; 18 படகுகளும் பறிமுதல்!

November 17, 2026
இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தது மேஜிக் அல்ல; நிதி ஒழுக்கமே காரணம் – நளிந்த ஜயதிஸ்ஸ!
செய்திகள்

இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தது மேஜிக் அல்ல; நிதி ஒழுக்கமே காரணம் – நளிந்த ஜயதிஸ்ஸ!

November 17, 2026
2027 வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச கால்நடை வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

2027 வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச கால்நடை வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!

November 17, 2026
கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அதிகாலை தீப்பரவல்!
செய்திகள்

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அதிகாலை தீப்பரவல்!

November 17, 2026
இந்தோனேசிய கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பா?
செய்திகள்

இந்தோனேசிய கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பா?

November 17, 2026
Next Post
லாஃப்ஸ் எரிவாயு விநியோகிக்க முடியாவிட்டால் வெற்றுச் சிலிண்டருக்கான பணத்தை மீள வழங்க உத்தரவு!

லாஃப்ஸ் எரிவாயு விநியோகிக்க முடியாவிட்டால் வெற்றுச் சிலிண்டருக்கான பணத்தை மீள வழங்க உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு