Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோதமான முறையில் சிறுவனை இங்கிலாந்துக்கு கடத்த முற்பட்ட இரு பெண்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் சிறுவனை இங்கிலாந்துக்கு கடத்த முற்பட்ட இரு பெண்கள் கைது!

2 years ago
in செய்திகள்

சட்டவிரோதமான முறையில் சிறுவன் ஒருவனை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சியை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

இந்த கடத்தல் தொடர்பில் இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எல்லை கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது மகனின் தகவல்களைப் பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து வேறு ஒரு பெண்ணைப் பயன்படுத்தி குறித்த சிறுவனை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

17 வயதுடைய சிறுவன் கடத்தப்படவிருப்பதாக தகவல் கிடைக்க பெற்றது.

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குறித்த சிறுவனை அழைத்துக் கொண்டு சம்பவ தினத்தன்று மதியம் 1.30 மணியளவில் ஶ்ரீலங்கன் விமானத்தில் லண்டன் செல்வதற்காக கட்டுநாயக்கவிற்கு வந்துள்ளார்.

இதன்போது, விமான சேவை சாளர அதிகாரி ஒருவருக்கு, ஆவணங்கள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இருவரும் விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள எல்லை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் குறித்த ஆவணங்கள் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்னர், சிறுவனிடம் விசாரித்ததில், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் தனது உண்மையான தாய் காத்திருப்பதாக சிறுவன் மேலும் கூறியுள்ளான்.

அதன்படி, திணைக்களத்தினர் அந்த பெண்ணையும் தங்கள் காவலில் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் குடிவரவு குடியகல்வு திணைக்கள எல்லை கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளிடம் சந்தேகநபர்களை ஒப்படைத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!
செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!

August 3, 2026
ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!
செய்திகள்

ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!

August 3, 2026
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

August 3, 2026
கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
Next Post
நள்ளிரவு முதல் குறைவடையும் எரிபொருள் விலை!

நள்ளிரவு முதல் குறைவடையும் எரிபொருள் விலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு