கிளிநொச்சி, முழங்காவில் கடற்படை முகாமில் பணியாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடல் பரப்பில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்தே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இறந்த இராணுவ வீரர் தனுஸ்கயான் பிரேமரத்ன என்னும் மைத்திரிகம சிரிபுர பகுதியைச் சேர்ந்தவர் எனவும்,
குறித்த இச்சம்பவம் தொடர்பாக முழங்காவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.