Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ராமஞ்ஞ பீடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிக்குவிடமிருந்து சங்கத் தலைமைக்கு சவால்!

ராமஞ்ஞ பீடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிக்குவிடமிருந்து சங்கத் தலைமைக்கு சவால்!

14 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நடைமுறையில் பௌத்த மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதனைகள் சிலவற்றை சவாலுக்கு உட்படுத்தி கருத்துகளை தெரிவித்த பௌத்த பிக்கு ஒருவரை, அவர் பிரநிதித்துவப்படுத்திய பீடத்திலிருந்து நீக்குவதற்கு உயர் சங்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் பௌத்த சங்க சாசனமானது சிறுவர் வன்புணர்வு உள்ளிட்ட வன்முறையான மற்றும் இனவாதக் கருத்துகளைக் கொண்ட பிக்குகளை பாதுகாத்து வருவதாக, ஆய்வுகளின் அடிப்படையிலேயே தனது கருத்துகளை வெளியிட்டதாகக் கூறும் அந்த பிக்கு குற்றஞ்சாட்டுகின்றார்.

பீடத்திலிருந்து நீக்கப்பட்ட பௌத்த பிக்குவுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சமூக ஊடகங்களில் தனது கருத்துகளைப் பரப்புவதன் மூலம் பிரபலமடைந்துள்ள கெகிராவ சுதஸ்ஸன தேரரை, இலங்கை ராமஞ்ஞ மகா பீடடத்திலிருந்து நீக்குவதற்கும், இலங்கை ராமஞ்ஞ மகா பீடத்தை சேர்ந்த பிக்குவாக சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள சாமணேர / உபசம்பதா தேரருக்கான பதிவை இரத்து செய்வதற்கும் பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிப்பதற்கும் அதியுயர் சபை என அழைக்கப்படும் சங்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

“பௌத்தர்களின் நம்பிக்கையும், மதப்பற்றும், பீடத்தின் கௌரவமும் சீர்குலையும் வகையில் சாதி தொடர்பான தவறான நடத்தைகளிலும் பாவச் செயல்களிலும் ஈடுபடுகின்ற குற்றத்திற்காக, சங்கத்திலிருந்து நீக்கும் தண்டனையை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ விதிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளது (கதிகாவத, பக்கம் 106).” மற்றும் “பீடத்திலிருந்து நீக்குதல், சங்க உறவுகளைத் தடை செய்தல் மற்றும் நடத்தை ரீதியில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு குற்றத்திற்கும் உரிய எச்சரிக்கை உள்ளிட்ட தண்டனைகளை விதிக்கும் அதிகாரம் உயரிய நீதிமன்றத்திற்கு உள்ளது (கதிகாவத, பக்கம் 106)” என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சரத்துக்களின் அடிப்படையில், பௌத்தர்களின் நம்பிக்கை, மதப்பற்று மற்றும் பீடத்தின் கௌரவம் ஆகியவற்றைப் பாதிக்கும் வகையில் சாதி தொடர்பான தவறான நடத்தைகள் மற்றும் பாவச் செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கெகிராவ சுதஸ்ஸன தேரரைக் குற்றவாளியாகக் கருதி, இலங்கை ராமஞ்ஞ மகா பீடத்திலிருந்து நீக்குவதற்கு சங்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பௌத்த மதம் மற்றும் பௌத்த இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வ ஞானம், கர்மா, மறுபிறப்பு, முப்பத்திரண்டு மகா புருஷ இலட்சணங்கள், நரகம், தேவலோகங்கள், பஞ்சசீலம், ஆகாயத்தில் பயணித்தல் போன்ற போதனைகள் மற்றும் மதம் சார்ந்த விடயங்கள் தொடர்பில் கேள்விகளை எழுப்பி, கெகிராவ சுதஸ்ஸன தேரர் கடந்த காலங்களில் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

இலங்கை ராமஞ்ஞ மகா பீடத்தின் நீதிமன்ற பதிவாளர் தேரருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு அமைய, உத்தியோகபூர்வ அழைப்பாணைகளைப் பெற்ற வட்டகொட மக்கவிஹாரி தேரர், கொத்தமலை குமார கஸ்ஸப தேரர் மற்றும் களனி சித்தார்த்த தேரர் ஆகியோர் முறைப்பாட்டாளர் தரப்பாக நீதிமன்ற நடவடிக்கையில் பங்கேற்றதாக, இலங்கை ராமஞ்ஞ மகா பீடத்தினால், 2026 செப்டெம்பர் 19ஆம் திகதி மினுவாங்கொடை பிக்கு பயிற்சி நிலையமொன்றில் கெகிராவ சுதஸ்ஸன தேரருக்கு எதிராக நடத்தப்பட்ட விசேட சங்க நீதிமன்ற அமர்வு குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள களனி சித்தார்த்த தேரர் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டிலும், ஐந்து தேரர்களைக் கொண்ட குழுவின் முன்னிலையில் கெகிராவ சுதஸ்ஸன தேரர் அழைக்கப்பட்டு, தேரவாத பௌத்தத்திற்கு முரணான கருத்துக்களையும், பௌத்த இலக்கியத்திற்கும் அன்றாட மத அனுஷ்டானங்களுக்கும் முரணான கருத்துக்களையும் சமூகத்தில் பரப்பமாட்டேன் என எழுத்துமூல ஆவணமொன்றில் கையொப்பமிட்டதாக, களனி சித்தார்த்த தேரர் சமூக ஊடகங்கள் ஊடாகத் தெரிவித்துள்ளார்.

“2025ஆம் ஆண்டிலும், பரகந்தெனிய வீரசிங்க பிரிவெனாவில் ஐந்து தேரர்களைக் கொண்ட குழுவின் முன்னிலையில் கெகிராவ சுதஸ்ஸன தேரரையும் அவரது ஆசிரியரையும் அழைத்திருந்தனர். இதன்போது மிகவும் சுமுகமான முறையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டதுடன், தேரவாத பௌத்தத்திற்கு முரணான கருத்துக்களையும், பௌத்த இலக்கியத்திற்கும் அன்றாட மத அனுஷ்டானங்களுக்கும் முரணான கருத்துக்களையும் சமூகத்தில் பரப்பமாட்டோம் என எழுத்துமூல ஆவணமொன்றில் கையொப்பமிடப்பட்டது.”

ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மகா பீடத்திலிருந்து தன்னை நீக்கிய பின்னர், கெகிராவ சுதஸ்ஸன தேரர் சமூக ஊடகங்கள் ஊடாக, பௌத்தம் தொடர்பாக தாம் முன்வைத்த அனைத்து கருத்துக்களையும் ஆய்வுபூர்வமாகவும், மூல ஆதாரங்களுடனுமே முன்வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

“நான் பௌத்த தர்மம் தொடர்பாக முன்வைத்த அனைத்து கருத்துக்களையும் ஆய்வுபூர்வமாகவும், மூல ஆதாரங்களுடனுமே முன்வைத்தேன். சில்லரை காரணங்களை அடிப்படையாகக் கொண்டு என்னை பீடத்திலிருந்து நீக்கிவிட்டனர். இலங்கையின் பௌத்த சாசனத்தில் இடமளிக்கப்படுவது வன்முறையில் ஈடுபடும் பிக்குகளுக்கும், இனவாத பிக்குகளுக்கும், ஒழுக்க விதிகளுக்கு முரணான செயல்களில் ஈடுபடும் பிக்குகளுக்கும், சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கும்தான். ஆய்வுபூர்வமான கல்விசார் ஆய்வுகளை மேற்கொள்ளும் பிக்குகள் வெளியேற்றப்படுகின்றனர். இன்று எனக்கு வழங்கப்பட்ட பீடத் தீர்ப்பின் மூலம் இலங்கையின் பௌத்த சாசனத்தைப் பாதுகாத்துவிட்டதாக அனைவரும் நினைத்தால், அவர்கள் அனைவருக்கும் எனது அன்பும் கருணையும் உரித்தாகட்டும்.”

கெகிராவ சுதஸ்ஸன தேரர் ராமஞ்ஞ பீடத்திலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக தற்போது சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதுடன், சிரேஷ்ட ஊடகவியலாளர் உவிந்து குருகுலசூரிய தனது முகநூலில் பதிவொன்றை வெளியிட்டு, கெகிராவ சுதஸ்ஸன தேரரை நீதிமன்ற நடவடிக்கைகளை நாடுமாறு பரிந்துரைத்துள்ளார்.

“கெகிராவ சுதஸ்ஸன தேரரை சாசனத்திலிருந்து நீக்கியுள்ளனர். எந்தவித அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டுகளே முன்வைக்கப்பட்டுள்ளன. சுதஸ்ஸன தேரர் அஞ்ச வேண்டாம்! நாம் நீதிமன்றம் செல்வோம்!”

கெகிராவ சுதஸ்ஸன தேரர் ராமஞ்ஞ பீடத்திலிருந்து நீக்கப்பட்டமைக்கான 10 காரணங்கள் தொடர்பாக சமூக ஊடகச் செயற்பாட்டாளரான அனுஹஸ் சந்தரூ தனது பேஸ்புக் பதிவொன்றை வெளியிட்டு, சுதஸ்ஸன தேரர் ராமஞ்ஞ பீடத்திலிருந்து நீக்கப்பட்டமைக்கு தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள அவர், எந்தவித நிபந்தனைகளுமின்றி தேரருக்கு ஆதரவாகத் தான் முன்னிற்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஐபிஎல் வீரர் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தோனி; 2027 முதல் புதிய பொறுப்பு!
செய்திகள்

ஐபிஎல் வீரர் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தோனி; 2027 முதல் புதிய பொறுப்பு!

November 17, 2026
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு; பாடசாலை விருப்பங்களைப் பதிவு செய்யும் முறைமை இன்று முதல் திறப்பு!
செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு; பாடசாலை விருப்பங்களைப் பதிவு செய்யும் முறைமை இன்று முதல் திறப்பு!

November 17, 2026
நக்கிள்ஸ் மலைப்பகுதியில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமி விவகாரம்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
செய்திகள்

நக்கிள்ஸ் மலைப்பகுதியில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமி விவகாரம்; வெளியான அதிர்ச்சித் தகவல்!

November 17, 2026
இலங்கைப் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய தரத்தை உயர்த்த புதிய திட்டம்!
செய்திகள்

இலங்கைப் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய தரத்தை உயர்த்த புதிய திட்டம்!

November 17, 2026
கிளிநொச்சியில் தீபாவளியன்று பெண் மீது கூட்டு பாலியல் வன்முறை; ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறல்!
செய்திகள்

கிளிநொச்சியில் தீபாவளியன்று பெண் மீது கூட்டு பாலியல் வன்முறை; ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறல்!

November 17, 2026
மயானத்தில் கல்லறைக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

மயானத்தில் கல்லறைக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்பு!

November 17, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.