Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிளிநொச்சியில் தீபாவளியன்று பெண் மீது கூட்டு பாலியல் வன்முறை; ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறல்!

கிளிநொச்சியில் தீபாவளியன்று பெண் மீது கூட்டு பாலியல் வன்முறை; ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறல்!

23 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தீபாவளித் தினத்தன்று கிளிநொச்சியின் எல்லைக் கிராமம் ஒன்றில், 26 வயதுடைய பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண் தனது நோய்வாய்ப்பட்ட தந்தையுடன் வீட்டில் இருந்தபோது, முகமூடி அணிந்த ஏழு பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. பின்னர், தந்தையைத் தாக்கி சமையலறைக்குள் அடைத்து வைத்துவிட்டு, அவரை வெளியே வரவிடாமல் கத்தியுடன் காவலில் நின்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, குறித்த பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில், 17, 19 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் உள்ளிட்டவர்கள் தொடர்புபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் இருந்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கிராமத்துப் பெண்கள் குழுமத்தின் WhatsApp குழுவில் பாதிக்கப்பட்ட பெண் பதிவிட்டுள்ள கருத்துகள் சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன.

“இந்தச் சம்பவத்தால் நான் வெட்கப்பட வேண்டுமா? அவமானப்பட வேண்டுமா? இல்லை! இத்தகைய ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்கள்தான் வெட்கப்பட வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்குப் பெண்களை மதிக்கவும், பாதுகாக்கவும் கற்றுக்கொடுங்கள்” என அவர் பதிவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றம் சுமத்தும் சமூக மனப்பான்மைக்கு எதிராகவும், ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்கும் பண்பைக் கற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவரது கருத்து வலியுறுத்தியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பான அச்சங்கள் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய சம்பவங்கள் பெண்களின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பான கேள்விகளை எழுப்புகின்றன.

பெண்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளையும் அறிவுரைகளையும் வழங்குவதற்குப் பதிலாக, பெண்களை மதிக்கவும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஆண் பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டியது குடும்பங்களினதும் சமூகத்தினதும் பொறுப்பாகும்.

குறித்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுடன், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதும் சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கைப் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய தரத்தை உயர்த்த புதிய திட்டம்!
செய்திகள்

இலங்கைப் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய தரத்தை உயர்த்த புதிய திட்டம்!

November 17, 2026
மயானத்தில் கல்லறைக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

மயானத்தில் கல்லறைக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்பு!

November 17, 2026
அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு; இன்று முதல் வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம் – நவம்பர் 27 கொடுப்பனவு!
செய்திகள்

அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு; இன்று முதல் வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம் – நவம்பர் 27 கொடுப்பனவு!

November 17, 2026
“மாகாணசபைத் தேர்தல் நடத்துவீர்களா? இல்லையா?;  நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கேள்வி!
அரசியல்

“மாகாணசபைத் தேர்தல் நடத்துவீர்களா? இல்லையா?; நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கேள்வி!

November 17, 2026
உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில்?
செய்திகள்

உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில்?

November 17, 2026
கஸ்ஸப தேரர் பிணையில் விடுதலை
செய்திகள்

கஸ்ஸப தேரர் பிணையில் விடுதலை

November 17, 2026
Next Post
இலங்கைப் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய தரத்தை உயர்த்த புதிய திட்டம்!

இலங்கைப் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய தரத்தை உயர்த்த புதிய திட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு