முந்தலம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளிச்சகுளம் ஏரியில் நீராடச் சென்றவர்கள் மத்தியில் பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
இச் சம்பவம் நேற்று (21) இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள உடப்புவ பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவி நான்கு நண்பிகள் மற்றும் ஒரு நண்பியின் பாட்டியுடன் நீராட சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முந்தலம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.