மின்னல் தாக்கியதில் வலஸ்முல்ல வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (10) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இந்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த மூன்று நோயாளிகள் உடனடியாக வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின்னல் தாக்கத்தினால் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த விலையுயர்ந்த சிகிச்சை கருவிகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.