பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த லொறியொன்றின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன் லொறியில் பயணித்த இருவர் தப்பி சென்றுள்ளனர் .
தப்பி சென்ற இருவரும் சட்டவிரோதமான முறையில் மாடுகளை ஏற்றிக்கொண்டு லொறியொன்றில் பயணித்துள்ளனர் .
இவ்வாறு பயணித்த லொறியை போக்குவரத்து பொலிஸார் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர் .
சாரதி லொறியை நிறுத்தாது பொலிஸாரின் உத்தரவை மீறி அதிவேக வீதியின் மிக வேகமாகப் பயணித்துள்ளார் .
பொலிஸார் லொறியை பின் தொடர்ந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போது லொறியை வீதியில் கைவிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர் .
கைவிடப்பட்ட லொறியை பொலிஸார் சோதனை செய்த போது மாடுகள் மற்றும் சாரதி இருக்கைக்கு அடியிலிருந்த கைக்குண்டு , கைத்தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.