முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (09) முற்பகல் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் ஆஜராகியுள்ளார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, குறித்த விசாரணைகளுக்கு அமைவாக கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








