Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பௌத்த தேரர்கள் விவகாரம், நீதிபதிகளின் இடமாற்றம் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் கோரும் சஜித் பிரேமதாச!

பௌத்த தேரர்கள் விவகாரம், நீதிபதிகளின் இடமாற்றம் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் கோரும் சஜித் பிரேமதாச!

20 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பௌத்த தேரர்கள் தொடர்பான கவலைகள் மற்றும் நீதிபதிகளின் திடீர் இடமாற்றங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விசேட விவாதங்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு விடயங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, பௌத்த மதகுருமாரைக் குறிவைத்து இடம்பெறுவதாகக் கூறப்படும் சம்பவங்கள், சில சட்ட அமலாக்க நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் பௌத்த தேரர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் தொடர்பில் குறித்த கடிதத்தில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போதைய அரசாங்கத்துக்கு சாதகமற்ற தீர்ப்புகள் அல்லது உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்படுவது தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இவ்வாறான சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களையும் கவலைகளையும் தோற்றுவித்துள்ளதாக சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதித்துறையின் சுயாதீனத்தன்மையையும் அதன் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் உறுதிப்படுத்துவதற்கு இந்த விடயங்கள் தொடர்பில் வெளிப்படையான விளக்கங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் வரவு செலவுத் திட்ட விவாதங்களால் இந்த முக்கிய பிரச்சினைகள் தொடர்பான கவனம் திசைதிருப்பப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், குறித்த இரண்டு விடயங்களையும் நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்குத் தாமதமின்றி நடவடிக்கை எடுக்குமாறு சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம் இன்று!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம் இன்று!

November 9, 2026
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு!
செய்திகள்

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு!

November 9, 2026
வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் மான் தாக்கி கைதி உயிரிழப்பு!
செய்திகள்

வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் மான் தாக்கி கைதி உயிரிழப்பு!

November 9, 2026
அமெரிக்காவின் தாக்குதல் அச்சம்; அணு உலைகளுக்கு அருகில் வசிப்போருக்கு அயோடின் மாத்திரைகளை விநியோகிக்கும் ஈரான்!
உலக செய்திகள்

அமெரிக்காவின் தாக்குதல் அச்சம்; அணு உலைகளுக்கு அருகில் வசிப்போருக்கு அயோடின் மாத்திரைகளை விநியோகிக்கும் ஈரான்!

November 9, 2026
உகந்தமலை முருகன் ஆலயத்தில் இம்முறை கந்தசஷ்டி உற்சவம் மட்டுப்படுத்தப்பட்டது; சூரசம்ஹாரமும் நடைபெறாது
செய்திகள்

உகந்தமலை முருகன் ஆலயத்தில் இம்முறை கந்தசஷ்டி உற்சவம் மட்டுப்படுத்தப்பட்டது; சூரசம்ஹாரமும் நடைபெறாது

November 9, 2026
களுவாஞ்சிகுடியில் சுகாதார பரிசோதனை; கோழி இறைச்சிகள் அழிப்பு
செய்திகள்

களுவாஞ்சிகுடியில் சுகாதார பரிசோதனை; கோழி இறைச்சிகள் அழிப்பு

November 9, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு