விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிக் கிரியைகள் நாளை (21) இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளது.
இதேவேளை, விபத்தில் உயிரிழந்த அதிபர் மற்றும் அவருடன் பயணித்த ஏனையவர்களுக்காக 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல் கமேனி அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.