Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனியாக வசிக்கும் முதியவர்களுக்கு ஆபத்து; பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

தனியாக வசிக்கும் முதியவர்களுக்கு ஆபத்து; பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

16 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தனியாக வசிக்கும் முதியவர்களை இலக்குவைத்து கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதால், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிள்ளைகள் வெளிநாடுகளுக்குத் தொழிலுக்குச் செல்வது அல்லது நாட்டின் வேறு பகுதிகளில் குடியேறுவது போன்ற காரணங்களால் பல முதியவர்கள் தனிமையில் வாழ்ந்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறான வீடுகளை இலக்குவைத்து போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் பணம் மற்றும் நகைகளைத் திருடும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், சில சம்பவங்கள் முதியவர்களின் உயிரிழப்புக்கும் காரணமாகியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனைக் கருத்திற்கொண்டு, முதியவர்களைப் பராமரிப்பதற்காகப் பணியமர்த்தப்படும் நபர்களின் பின்னணியைச் சரிபார்த்து, உரிய பொலிஸ் அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவசரத் தேவைகளுக்காக பொலிஸ் அவசர இலக்கமான 119 மற்றும் சுவசெரிய அம்புலன்ஸ் சேவை இலக்கமான 1990 ஆகியவற்றை வீடுகளில் தெளிவாகக் காட்சிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தனியாக வசிக்கும் முதியவர்கள் தொடர்பில் கிராம உத்தியோகத்தர் மற்றும் சமூகப் பொலிஸ் குழுவுக்கு அறிவித்தல், எளிதில் பயன்படுத்தக்கூடிய கையடக்கத் தொலைபேசிகளை வழங்குதல், அயலவர்களுடன் நல்லுறவைப் பேணுதல் மற்றும் அறிமுகமில்லாதவர்களை வீடுகளுக்குள் அனுமதிக்காமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை, முதிய குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பில் பிள்ளைகளும் உறவினர்களும் அதிக அக்கறை செலுத்தி, ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ராமஞ்ஞ பீடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிக்குவிடமிருந்து சங்கத் தலைமைக்கு சவால்!
செய்திகள்

ராமஞ்ஞ பீடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிக்குவிடமிருந்து சங்கத் தலைமைக்கு சவால்!

November 17, 2026
ஐபிஎல் வீரர் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தோனி; 2027 முதல் புதிய பொறுப்பு!
செய்திகள்

ஐபிஎல் வீரர் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தோனி; 2027 முதல் புதிய பொறுப்பு!

November 17, 2026
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு; பாடசாலை விருப்பங்களைப் பதிவு செய்யும் முறைமை இன்று முதல் திறப்பு!
செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு; பாடசாலை விருப்பங்களைப் பதிவு செய்யும் முறைமை இன்று முதல் திறப்பு!

November 17, 2026
நக்கிள்ஸ் மலைப்பகுதியில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமி விவகாரம்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
செய்திகள்

நக்கிள்ஸ் மலைப்பகுதியில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமி விவகாரம்; வெளியான அதிர்ச்சித் தகவல்!

November 17, 2026
இலங்கைப் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய தரத்தை உயர்த்த புதிய திட்டம்!
செய்திகள்

இலங்கைப் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய தரத்தை உயர்த்த புதிய திட்டம்!

November 17, 2026
கிளிநொச்சியில் தீபாவளியன்று பெண் மீது கூட்டு பாலியல் வன்முறை; ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறல்!
செய்திகள்

கிளிநொச்சியில் தீபாவளியன்று பெண் மீது கூட்டு பாலியல் வன்முறை; ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறல்!

November 17, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு